கம்பராமாயணம் 10414 · யுத்த 39.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயோத்தி வேந்தன் - அயோத்தி நகருக்கு அரசனான ஸ்ரீராமன்; விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க - அகன்ற கடலின் நடுவில் தோன்றிய மின்னலைப் போல முத்தாரம் மார்பில் தோன்ற, எரி கதிர்க்கடவுள் தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப - பிரகாசிக்கிற ஆயிரம் கிரணங்களை உடைய சூரியனைக் கூட்டமான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற கிரீடம் ஒத்திருக்க; கருமுகிற்கு அரசு செந்தாமரை மலர்க்காடு பூத்து - கருமேகத்துக்கு அரசானது செந்தாமரைப் பூக்கள் காடுபோலத் தன்னிடையே பூக்கப் பெற்று; ஓர் அரியணைப் பொலிந்தது என்ன இருந்தனன் - ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருந்தது என்று சொல்லும்படி வீற்றிருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With his necklace gleaming like lightning blossoming in the middle of the wide sea,
- with a crown of clustered gems resembling the god of blazing rays,
- as though the king of dark clouds, blooming with a forest of red lotuses,
- shone upon a lion-throne, so sat the king of Ayōttī.
What the poem says
Irāmaṉ on his throne: his pearl necklace flashes on his dark chest like lightning over the sea, his jewelled crown blazes like the sun, and with his red lotus-like eyes, hands and feet he looks like a king among rain clouds covered in red lotuses, seated on a lion-throne.