கம்பராமாயணம் 10415 · யுத்த 39.3

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரகதச் சயில மீது வான் நிலாப் பாய்வது என்ன
இருகுழை இடறும் வேற்கண், இளமுலை, இளநலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த.

பொருள் · Meaning in Tamil

மரகதச் சயில மீது வாள் நிலாப் பாய்வது என்ன - பச்சைமணியால் ஆகிய மலையின் மேல் ஒளி நிலா வெள்ளம் பாய்வது போல; இருகுழை இடறும் வேற்கண், இளமுலை, இள நலார்தம் கர கமலங்கள் பூத்த கற்றை அம்கவரி தெற்ற - இரண்டு காதணிகளை முட்டித்தள்ளும் வேல் போன்ற நீண்ட கண்களையும், இளமுலைகளையும் உடைய இளமையும் அழகும் உடைய மகளிரது கைகளாகிய தாமரை மலரில் பூத்த வெண் சாமரைகள் மேலே வீசப்பெற; உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த - நாகலோகத்தினரும், புனிதர்களும் தேவலோகத் தேவரும் பரவித் தோத்திரம் செய்ய.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As though bright moonlight were streaming over an emerald mountain,
  2. the thick, lovely whisks that bloomed in the lotus hands of young beauties
  3. with spear-like eyes that brush against their two earrings and young breasts were waved over him,
  4. while Nāgas, men and the gods of the sky praised and extolled him.

What the poem says

Irāmaṉ's court continues to be described, the sentence running on through several verses. Young women with long eyes wave white yak-tail whisks over him, so that his dark body under the white plumes looks like an emerald mountain bathed in moonlight. Serpent beings, humans and gods all sing his praises.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marakatac cayilamītu vāḷ nilāp pāyvatu eṉṉa
iru kuḻai iṭaṟum vēṟ kaṇ, iḷamulai, iḷa nalārtam
karakamalaṅkaḷ pūtta kaṟṟai am kavari teṟṟa,
urakarum, nararum, vāṉattu umparum, paravi ētta.