கம்பராமாயணம் 10416 · யுத்த 39.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திலக வாள் நுதல் - இராமபிரானது திலகம் அணிந்த ஒளிபடைத்த நெற்றி; உலகம் ஈரேழும் தன்ன ஒளிநிலாப் பரப்ப - பதினான்கு உலகங்களிலும் தனது நிலவொளியைப் பரவச் செய்தலால்; வானில் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய - வானத்தில் வரும் வெண்ணிலவானது மனம் வருந்தி மெல்ல மெல்லத் தேய்ந்து போக; எழுதனிக் குடை - அரியணைக்கு மேலாக எழுந்துள்ள வெண்கொற்றக் குடையானது; கலக வாள் நிருதர் தன்னைக் கட்டழித்திட்ட கீர்த்தி இலகி மேல் நிவந்தது என்ன - கலகமிடுகின்ற கொடிய அரக்கர்களை அடியோடு இல்லையாம் படிச் செய்த பெரும்புகழ் விளங்கி மேல் உயர்ந்துள்ளது போல; நின்று ஏய - நின்று பொருத்தமுற அமைய.
புகழ் வெண்மை நிறமாதலின் அது குடைக்கு உவமையாயிற்று. 'திலகவாள் நுதல் போன்ற வெண்திங்கள்' என்று நுதலைத் திங்களுக்கு அடையாக்கி, குடையின் ஒளி நிலா உலகம் ஈரேழும் பரவுதலால் திங்கள் சிந்தை நொந்து தேய' எனப் பொருள் உரைத்தல் சிறந்தது என்பது என் குருநாதர் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As its moonlight spread through all the twice-seven worlds,
- so that the white moon in the sky, bright as a brow marked with tilakam, pined at heart and easily waned,
- the single parasol rising above him stood fittingly,
- as though the fame of destroying the lord of the warring, sword-bearing Nirutar had risen gleaming on high.
What the poem says
The white royal parasol rises over Irāmaṉ's throne like his fame, white in Tamil convention, for having destroyed Irāvaṇaṉ and his Rākṣasas. One reading has the moonlike radiance of Irāmaṉ's forehead filling the fourteen worlds; another, preferred by a scholar the commentary cites, takes the parasol's own light as spreading everywhere, so that the moon in the sky, outshone, wanes in envy.