கம்பராமாயணம் 10419 · யுத்த 39.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மந்திரக் கிழவர் சுற்ற - அரசனது ஆலோசனைக்குரிய அமைச்சர் முதலியோர் சுற்றியிருப்ப; மறையவர் வழுத்தி ஏத்த - அந்தணர்கள் தோத்திரம் செய்து பாராட்ட; தந்திரத் தலைவர் போற்ற - சேனைத் தலைவர்கள் துதிக்க; தம்பியர் மருங்கு சூழ - பரத இலக்குவ சத்துருக்கனராகிய தம்பிமார்கள் பக்கத்தில் சூழ இருப்ப; சிந்துரப் பவளச் செவ்வாய்த் தெரிவையர் பலாண்டு கூற - செந்நிறமான பவளம் போன்ற சிவந்த வாயை உடைய மகளிர்கள் பல்லாண்டு கூறி வாழ்த்த; (இவ்வாறு) எம்பிரான் - ஸ்ரீராமபிரான்; இந்திரற்கு உவமை ஏய்ப்ப இருந்த காலை - இந்திரன் திருவோலக்கமிருந்தமைக்கு உவமை சொல்லலாம் படி வீற்றிருந்த பொழுது.
இராமபிரானது திருவோலக்கத்துக்கு இந்திரனது திருவோலக்கத்தை உவமையாக்கினால் இந்திரனது திருவோலக்கம் இதனினும் சிறந்ததாகிவிடும்; 'உவமை உயர்ந்ததாதலின்' என்று கருதிய கவிச் சக்கரவர்த்தி உவமையாக்கி இதுபோல இந்திரனது திருவோலக்கம் உள்ளது என்று சொல்லி அதனினும் இது மேம்பட்டது என்ற கருத்தைப் பெற வைக்கவே 'இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த' என்றார். இந்நயம் நினையுந்தொறும் இன்பம் பயப்பது என்பது என் குருநாதர் மகாவித்துவான், மயிலம். வே.சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the elders of the council around him, brahmins praising and extolling him,
- the chiefs of the army hailing him, his younger brothers at his side,
- and women with lips red as vermilion coral wishing him long years,
- as our lord sat there, in a way that could serve as a comparison for Intiraṉ —
What the poem says
Irāmaṉ holds court surrounded by ministers, priests, generals and his brothers, while women sing wishes for his long life. The poet says Irāmaṉ's court could serve as the standard against which Intiraṉ's is measured, not the reverse. Since the standard of comparison is normally the greater thing, this neatly implies that Irāmaṉ's court surpasses that of the king of the gods. The sentence continues.