கம்பராமாயணம் 10423 · யுத்த 39.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வள்ளலும் - இராமபிரானும்; அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் - அத்துணைவர்களிடத்து அளவுபடாது வளர்ந்த பேரன்பானது; உள்ளுறப் பிணித்த செய்கை - தன்மனத்தை இறுகக் கட்டியிருக்கிற பாங்கினை; ஒளி முகக் கமலம் காட்டி - ஒளி சிறந்த தனது முகத்தாமரை மூலம் காண்பித்து; அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து - நெஞ்சாரத் தழுவினவனைப் போல மனம் மகிழ்ச்சி அடைந்து; இனிதின் நோக்கி - கருணைப் பார்வையால் இனிமையாகப் பார்த்து; 'எள்ளல் இலாத மொய்ம்பீர் - இகழப் படாத வலிமை படைத்தவர்களே! ஈண்டு இனிது இருத்திர் - இங்கே இனிமையாக இருங்கள்; என்றான் -
ஆங்கிலம் · English translationAI
Translation
- The generous one, showing in his radiant lotus face
- how the boundless love he felt for them had bound his heart within,
- rejoiced inwardly as if he had held them in a close embrace, looked on them sweetly,
- and said, “Heroes whose strength none can scorn, stay here at ease.”
What the poem says
Irāmaṉ's face shows the love that binds his heart to his allies. Glad as though he had embraced each of them, he looks at them kindly and invites these heroes, whose strength no one can belittle, to stay on happily in Ayōttī.