கம்பராமாயணம் 10429 · யுத்த 39.17

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சம்பரன் தன்னை வென்று தயரதன் நின்ற காலத்து
உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும்
கொம்புடை மலையும் தேரும், குரகதக் குழுவும் தூசும்
அம்பரம் தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான்.

பொருள் · Meaning in Tamil

அம்பரம் தன்னை நீத்தான் - திருப்பாற்கடலைத் துறந்து அயோத்தியில் அவதரித்த இராமபிரான்; சம்பரன்தன்னை வென்ற தயரதன் - இந்திரன் பகையாகிய சம்பரனை வென்ற தயரதசக்கரவர்த்தி; ஈன்ற காலத்து - தன்னைப் பெற்றெடுத்த பொழுது; உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும் - தேவர் தலைவனாகிய இந்திரன் தனக்குக் கொடுத்த ஒளிபடைத்த மணிகள் அழுத்திய கடகத்தோடும்; கொம்புடைமலையும் - யானைகளும், தேரும் -; குரகதக் குழுவும் - குதிரைக் கூட்டமும்; தூசும் - பட்டாடையும் (ஆகியவற்றை), அலரி - சூரியனது; காதலனுக்கு - மகனாகிய சுக்கிரீவனுக்கு; ஈந்தான் -.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The bracelet of shining gems that the lord of the gods gave
  2. when Tacarataṉ, conqueror of Camparaṉ, fathered him,
  3. together with tusked mountains, chariots, herds of horses and fine cloth,
  4. he who left the ocean gave to the dear son of the Sun.

What the poem says

Irāmaṉ, who left the milk ocean to be born on earth, now honours Cukkirīvaṉ, son of the Sun. He gives him the jewelled bracelet that Intiraṉ presented at Irāmaṉ's birth, a gift owed to Tacarataṉ for defeating Intiraṉ's enemy, the demon Śambara, along with elephants, chariots, horses and silks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1camparaṉtaṉṉai veṉṟa tayarataṉ īṉṟa kālattu
umpartam perumāṉ īnta oḷi maṇik kaṭakattōṭum
kompuṭai malaiyum tērum, kurakatak kuḻuvum tūcum
amparamtaṉṉai nīttāṉ alari kātalaṉukku īntāṉ.