கம்பராமாயணம் 10431 · யுத்த 39.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பின்னரும் அவனுக்கும் ஐயன் பெருவிலை ஆரத்தோடும்
மன்னும் நுண்தூசும், மாவும், மதமலைக் குழுவும், ஈயா,
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி ‘என்றான்.
பொருள் · Meaning in Tamil
ஐயன் - இராமன்; அவனுக்கு - அங்கதனுக்கு, பின்னரும் - மேலும்; பெருவிலை ஆரத்தோடும் - மிக்க விலை உடைய முத்துமாலையோடும்; மன்னும் நுண் தூசும் - நிலைபெற்ற நுண்ணிய பட்டாடையும்; மாவும் - குதிரையும்; மதமலைக்கு அரசும் - யானையும்; ஈயா - அளித்து; 'உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய்! - உனக்கு நீயே அல்லாமல் இந்த உலகில் வேறு உவமை சொல்ல முடியாமல் சிறந்தவனே! கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி மன்னுக - சுக்கிரீவனோடும் பொருந்தி வாழ்க; என்றான் -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the lord gave him as well a necklace of great price,
- fine lasting silks, horses and a king among rutting elephants,
- and said: “You who have no equal in this world but yourself,
- live long in harmony with the son of the Sun.”
What the poem says
Irāmaṉ adds a precious necklace, fine silks, horses and a royal elephant to his gifts for Aṅkataṉ, praises him as without equal, and bids him live in harmony with Cukkirīvaṉ, his uncle, who killed his father Vālī.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉarum avaṉukku aiyaṉ peru vilai ārattōṭum
maṉṉum nuṇ tūcum, māvum, matamalaikku aracum, īyā,
‘uṉṉai nī aṉṟi, inta ulakiṉil oppu ilātāy!
maṉṉuka katirōṉ maintaṉtaṉṉoṭum maruvi ‘eṉṟāṉ.