கம்பராமாயணம் 10432 · யுத்த 39.20

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை; பைம்பூண்
போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக ‘என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஐயன் மாருதி தன்னை மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி - இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு இனிமையாக அருட் பார்வை பார்த்து; 'பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! - பசிய பூண் அணிந்த போர்க்குத் தகுதியாகிய வலிய தோளை உடையவனே! நீ அலால் ஆர் உதவிடுதற்கு ஒத்தார்? - நீ அல்லாமல் வேறு யார் உதவி செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்; அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை - அன்று இராவணயுத்தத்தின் போது நீ ஆற்றிய பெரிய உதவிகளுக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறாகிய செயல் வேறு எதுவும் இல்லை; 'பொருந்துறப் புல்லுக' - என்னை நன்கு தழுவிக் கொள்வாயாக, இதுவன்றி வேறு கைம்மாறு இல்லை; என்றான் -.

அனுமனை 'என்னைத் தழுவிக் கொள்க' என்று இராமன் கூறவே இராமன் தழுவப்பட்டவன் ஆகிறான். தழுவுகின்றவன் உயர்ந்தோன் என்னும் முறைப்படி இராமன் இப்படிக் கூறியதனால் அநுமனைத் தன்னினும் உயர்ந்தவனாக ஆக்கினான்; தனக்குக் கைம்மாறு கருதாமல் உதவி செய்தவர்களைத் தன்னினும் உயர்ந்தோராக ஆக்கிவிடுதல் இராமனது பண்பு நலம் ஆகும் என்பது திருச்சி பேராசிரியர் இரா. இராதகிருஷ்ணன் அவர்கள் வழங்கிய நயவுரை.

"போர் உதவிய திண் தோளால் பொருந்துறப் புல்லுக” என்பது மேடை ஏறிய பாடம். இனி மாருதியைத் தழுவிக் கொள்ளச் சொல்லவே அவனுக்குள் இவன் உடம்பு அடங்கியதாகும். எனவே அனுமனுக்குத் தன்னுடம்பையே கொடுத்தான் ஆயிற்று. அசோகவனத்தில் 'இராம' நாமம் சொல்லி பிராட்டியைக் கொடுத்தான். இராவண வதத்தில் இருமுறை இளைய பெருமாளையும் ஒருமுறை பெரிய பெருமாளையும் மீட்டுக் கொடுத்து 'நின்னின் தோன்றினோம்' (கம்.ப.88/2) என்று சொல்ல வைத்தான். எரி வீழ்ந்து இறந்து புக எண்ணிய பரதனைக் காத்து உயிர் கொடுத்து நிறுத்தினான். இங்ஙனம் நால்வர் உடம்பையும் நிறுத்திய அவனுக்குத் தன் திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாக ஆகும் என்று கருதித் தழுவிக் கொள்ளச் சொன்னான் ஆகும்; அவன் திருமேனி சகலமும் ஆய் இருப்பதன்றோ ஆதலின் அவன் திருமேனி அநுமனுக்கு எல்லாம் கொடுத்ததாக ஆயிற்று என்பது என் குருநாதர் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord looked at Māruti with delight, sweetly and with grace, and said:
  2. “Who but you was fit to give such help? For the great help
  3. you gave that day there is nothing else that I can do in return; you of the strong shoulders
  4. with fresh ornaments, who gave aid in battle — hold me close in your embrace.”

What the poem says

Irāmaṉ tells Aṉumaṉ that nothing he could give would repay his help in the war, so he asks Aṉumaṉ to embrace him. Since the one who embraces is the greater, Irāmaṉ thereby places Aṉumaṉ above himself. Another reading says that by giving his own body, which contains everything, Irāmaṉ gives Aṉumaṉ all things. This repays one who restored Cītai, twice saved Ilakkuvaṉ, once saved Irāmaṉ, and kept Paratan from the fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mārutitaṉṉai aiyaṉ makiḻntu, iṉitu aruḷiṉ nōkki,
‘ār utaviṭutaṟku ottār, nī alāl? aṉṟu ceyta
pēr utavikku yāṉ cey ceyal piṟitu illai; paim pūṇ
pōr utaviya tiṇ tōḷāy poruntuṟap pulluka ‘eṉṟāṉ.