கம்பராமாயணம் 10433 · யுத்த 39.21

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன்திணி வயிரப் பைம்பூண் ஆரமும், புனைமென் தூசும்
வன்திறல் கயமும், மாவும், வழங்கினன், வழங்கு சீரான்.

பொருள் · Meaning in Tamil

வயங்கு சீரான் - விளங்கிய புகழை உடைய இராமன்; என்றலும் - இவ்வாறு கூறுதலும்; வணங்கி, நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை - பணிந்து நாணமுற்று வாயைக் கையால் புதைத்துக் கொண்டு விளங்கிய வேட்டி முகப்பினை அடக்கிக் கொண்டு நின்ற வலியோனாகிய அனுமனை, முழுதும் நோக்கி - நன்றாகப் பார்த்து; பொன் திணி வயிரம் பைம்பூண் ஆரமும் - பொன் திணித்துச் செய்யப் பெற்ற பசிய பூணும் முத்துவடமும்; புனை மென் தூசும் - அணிதற்குரிய மெல்லிய பட்டாடையும்; வன்திறல் கயமும் - வலிமிக்க யானையும்; மாவும் - குதிரையும்; வழங்கினன் - ஈந்தான்.

தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடக்கம் என்னும் மெய்ப்பாட்டின் அடையாளம் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, the mighty one bowed, abashed, covered his mouth,
  2. and stood holding back the front of his gleaming garment; the one of shining fame
  3. looked at him fully and gave him a necklace with fresh ornaments of diamond set in gold,
  4. fine garments to wear, an elephant of great strength, and horses.

What the poem says

Aṉumaṉ, embarrassed by such praise, bows, covers his mouth with his hand and gathers in the front of his garment, traditional gestures of humility in the presence of a superior. Irāmaṉ then gives him a diamond and gold necklace, fine silks, an elephant and horses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, vaṇaṅki nāṇi, vāy putaittu, ilaṅku tāṉai
muṉtalai otukki niṉṟa moympaṉai muḻutum nōkki
poṉ tiṇi vayirap paim pūṇ āramum, puṉai meṉ tūcum
vaṉ tiṟal kayamum, māvum, vaḻaṅkiṉaṉ, vayaṅku cīrāṉ.