கம்பராமாயணம் 10434 · யுத்த 39.22

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகந்து நோக்க,
பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்த மாலை கைக்கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அன்னாள் இடர் அறிந்து உதவினாற்கே.

பொருள் · Meaning in Tamil

ஐயன் - இராமன்; பூ மலர்த் தவிசை நீத்து - தாமரை மலராகிய பீடத்தை வெறுத்து; பொன் மதில் மிதிலை பூத்த தேமொழித் திருவை - பொன்னாற் செய்த மதில் சூழ்ந்த மிதிலையில் தோன்றிய தேன் போலும் மொழியுடைய திருமகளாகிய சீதையை; திருவருள் முகத்து நோக்க - திருவருளோடு கூடிய முகத்தால் பார்க்க; (அவள்) அந்நாள் இடர் அறிந்து உதவினாற்கு - அசோக வனத்தில் தன் துன்பமறிந்து உதவிய அனுமனுக்கு, பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்தமாலை கைக்கொண்டு ஏமுறக் கொடுத்தாள் - பரவிய வேதத்தலைவியாகிய சரஸ்வதி தேவி தனக்களித்த முத்து மாலை ஒன்றைக் கையிற் கொண்டு இன்பமுறக் கொடுத்தாள். ஏ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the lord, with a face full of grace, looked at Tiru of honeyed speech,
  2. who had left her seat of lotus blossom and blossomed in golden-walled Mithilai,
  3. she took in her hand the necklace of large pearls given her by the lady of the Vedas in verse,
  4. and gladly gave it to him who knew her distress that day and came to her aid.

What the poem says

At a glance from Irāmaṉ, Cītai, Lakṣmī who left her lotus seat to be born in Mithilā, gives Aṉumaṉ a necklace of large pearls that Sarasvatī, goddess of the Vedas, had given her. It is her thanks to the one who found her in her misery in the Aśōka grove and brought her hope.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū malart tavicai nīttu, poṉ matil mitilai pūtta
tēmoḻit tiruvai aiyaṉ tiruvaruḷ mukattu nōkka,
pā maṟaik kiḻatti īnta paru mutta mālai kaik koṇṭu
ēmuṟak koṭuttāḷ, annāḷ iṭar aṟintu utaviṉāṟkē.