கம்பராமாயணம் 10436 · யுத்த 39.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நவமணிக் காழும், முத்து மாலையும், நலம்கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொற்பூண் உலப்பு இல பிறவும், ஒண்தார்க்
கவனவெம் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான்.
பொருள் · Meaning in Tamil
காதல் பவனனுக்கு இனிய நண்பன் பயந்து எடுத்தவனுக்கு - அன்பால் காற்றுக்கு இனிய நண்பனாகிய அக்கினி தேவன் மகனாகிய நீலன் என்னும் வானர சேனைத் தலைவனுக்கு; நவமணிக் காழும் - நவமணிகளால் ஆகிய வடமும்; முத்தும் மாலையும் நலங்கொள் தூசும் உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் - ; ஒண்தார்க் கவன வெம் பரியும் வேகக் கதமலைக்கு அரசும் - ; ஈந்தான் - கொடுத்தான்.
தார் - கிண்கிணி மாலை, கவனம் - வேகம். கதமலை - சீற்றமுடைய மலை போன்ற யானை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A chain of the nine gems, pearls and garlands, fine cloth,
- gold ornaments beyond compare and countless other things, fierce swift horses
- with bright bell-garlands, and a king among swift, wrathful mountain-elephants,
- he gave to the son of the dear friend of the Wind.
What the poem says
Next Irāmaṉ rewards Nīlaṉ, commander of the monkey army and son of Agni, the fire god, who is the Wind's close friend, with a chain of the nine gems, pearls, silks, gold ornaments, swift horses hung with bells and a fierce royal elephant.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nava maṇik kāḻum, muttum mālaiyum, nalam koḷ tūcum,
uvamai maṟṟu ilāta poṉ pūṇ ulappu ila piṟavum, oṇ tārk
kavaṉa vem pariyum, vēkak katamalaikku aracum, kātal
pavaṉaṉukku iṉiya naṇpaṉ payanteṭuttavaṉukku īntāṉ.