கம்பராமாயணம் 10438 · யுத்த 39.26

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பேச அரிது ஒருவர்க்கேயும் பெருவிலை இதனுக்கு; ஈதுக்
கோ, சரி இலது என்று எண்ணும் ஒளிமணிப் பூணும் தூசும்,
மூசு எரிக்கு உவமை வெம்மை மும்மதக் களிறும், மாவும்,
கேசரி தனக்குத் தந்தான் கிளர்மணி முழவுத் தோளான்.

பொருள் · Meaning in Tamil

கிளர் மணி முழவுத் தோளான் - மிக்குவிளங்கும் அழகிய முழவு போன்ற தோள் உடைய இராமன்; கேசரி தனக்கு - அனுமன் தந்தையாகிய கேசரிக்கு; பெருவிலை ஒருவர்க்கேயும் இதனுக்குப் பேச அரிது - மிக்க விலையை ஒருவராலும் இதனுக்குப் பேச முடியாது; ஈதுக்கோ சரி இலது - இதற்கொப்பான பொருள் இல்லை; என்று எண்ணும் ஒளி மணிப் பூணும் தூசும் - என்று மதிப்பிடப்படும் ஒளி படைத்த மணி ஆபரணமும் பட்டாடையும்; மூசு அரிக்கு மும்மை உவமை மும்மதக் களிறும் - உலகெங்கும் பரவும் வடவைத் தீக்கு மூன்று மடங்கு உவமையாகக் கூடிய மும்மத யானையும்; மாவும் - குதிரையும்; தந்தான் -

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “No one could name the great price of this; there is nothing
  2. to match it” — such were the ornaments of bright gems that he gave, with fine cloth,
  3. elephants flowing with rut from three places, three times fit to be compared with the spreading fire,
  4. and horses, to Kēcari — he of the shoulders like drums, gleaming with gems.

What the poem says

Kēcari, Aṉumaṉ's father, receives jewels of priceless worth, fine silks, horses and elephants in triple musth, compared, by the commentary's reading, to the all-devouring submarine fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēca aritu oruvarkkēyum peru vilai itaṉukku; ītuk
kō, cari ilatu eṉṟu eṇṇum oḷi maṇip pūṇum tūcum,
mūcu arikku uvamai mummai mummatak kaḷiṟum, māvum,
kēcaritaṉakkut tantāṉ kiḷar maṇi muḻavut tōḷāṉ.