கம்பராமாயணம் 10442 · யுத்த 39.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று உரைத்து, அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு
வன்திறல் களிறும், தேரும், வாசியும், மணிப்பொன் பூணும்,
பொன்திணி தூசும், வாசக் கலவையும், புதுமென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான் நாகணைத் துயிலில் தீர்ந்தான்.
பொருள் · Meaning in Tamil
நாகணைத் துயிலைத் தீர்ந்தான் - பாம்பணைத் துயிலை நீங்கி அவதரித்த இராமன்; என்று உரைத்து - என்று வீடணனைப் பாராட்டிக் கூறி; அவனுக்கு - அந்த வீடணனுக்கு; நன்று உற - நன்மை பொருந்த; அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு - தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு; வன்திறல் களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் - ; ஈந்தான் -.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying this, along with a bracelet of blazing gems that the immortals gave,
- elephants of great strength, chariots, horses, jewelled gold ornaments,
- cloth thick with gold, fragrant blended unguents and fresh soft sandal paste,
- he who had left his sleep on the serpent couch gave him generously.
What the poem says
Irāmaṉ, who left his sleep on the serpent Ādiśēṣa to be born on earth, gives Vīṭaṇaṉ a jewelled bracelet that was a gift of the gods, together with elephants, chariots, horses, gold ornaments, gold-woven cloth and fragrant pastes.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu, amarar īnta eri maṇik kaṭakattōṭu
vaṉ tiṟal kaḷiṟum, tērum, vāciyum, maṇip poṉ pūṇum,
poṉ tiṇi tūcum, vācak kalavaiyum, putu meṉ cāntum,
naṉṟu uṟa, avaṉukku īntāṉ nākaṇait tuyilait tīrntāṉ.