கம்பராமாயணம் 10445 · யுத்த 39.33

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நாடுறு நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏய செய்தல் கடன் ‘எனக் கருதிச் சூழ்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

இலங்கை வேந்தனுக்கும் - வீடணனுக்கும்; இனியன யாவும் இவ்வாறு கூறி - பிரிய வார்த்தைகளை இவ்வாறே சொல்லி; அலங்கல் வேல் மதுகை அண்ணல் - மாலையணிந்த வேலினையுடைய; வலிமிக்க இராமபிரான்; விடை கொடுத்தருளலோடும் - உத்திரவு கொடுத்துப் புறப்படச் சொல்லிய அளவில்; நலம்கொள் பேருணர்வின் மிக்கோர் - நன்மை கொண்ட மெய்யுணர்வால் சிறந்த அவர்கள்; நலன் உறும் நெஞ்சர் - ஆறுதல் அடைந்த மனம் உடையராய்; பின்னர்க் கலங்கலர் - பிறகு தடுமாற்றம் அடையாதவராய்; 'ஏய செய்தல் கடன்' - இராமபிரான் ஏவிய பணியைச் செய்தல் தமக்குரிய கடமை; எனக் கருதிச் சூழ்ந்தார் - என்று கருதிப் புறப்பட முடிவு செய்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the mighty lord of the garlanded spear had spoken all these kind words
  2. to the king of Ilaṅkai as well, and graciously given them leave,
  3. they, rich in good and great understanding, their hearts consoled,
  4. no longer troubled, resolved, thinking, “To do what he bids is our duty.”

What the poem says

After Irāmaṉ speaks to Vīṭaṇaṉ in the same affectionate way and gives all of them leave, the allies, wise and now consoled, stop grieving. They decide that carrying out his command is their duty, and prepare to leave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilaṅkai vēntaṉukkum ivvāṟu iṉiyaṉa yāvum kūṟi
alaṅkal vēl matukai aṇṇal viṭaikoṭuttaruḷalōṭum,
nalam koḷ pēr uṇarviṉ mikkōr, nalaṉ uṟum neñcar, piṉṉark
kalaṅkalar, ‘ēya ceytal kaṭaṉ ‘eṉak karutic cūḻntār.