கம்பராமாயணம் 10447 · யுத்த 39.35

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குகனைத்தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்செய் தேரோன்
மகனைத் தன்புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே எய்தி கனைகடல் இலங்கை புக்கான்
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே.

பொருள் · Meaning in Tamil

அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் - நெஞ்சார்ந்த அன்புடைய பெரியோனாகிய மாலை அணிந்த வீடணன்; வாள் எயிற்று அரக்கர் சூழ - கூரிய பல்லினை உடைய அரக்கர்கள் தன்னைச் சுற்ற; ககனத்தின் மிசையே ஏகி - (புட்பக விமானத்தில் அனைவரையும் அழைத்துக் கொண்டு); ஆகாய வழியாகச் சென்று. குகனைத் தன் பதியின் உய்த்து - குகனை அவன் நகராகிய சிருங்க பேரத்தில் கொண்டு விட்டு; குன்றினை வலம் செய் தேரோன் மகனை - மகாமேரு மலையைச் சுற்றி வரும் தேரினையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவனை; தன்புரத்தில் விட்டு - அவன் நகராகிய கிட்கிந்தையில் கொண்டுவிட்டு; அன்றே சென்று - அன்றைக்கே போய்; இலங்கை புக்கான் - இலங்காபுரியைச் சென்றடைந்தான்.

'சென்று புக்கான்' என இயைத்து, அன்றே அசை எனினும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bringing Kukaṉ to his own city, leaving the son of him whose chariot
  2. circles the mountain in his own town, with the sharp-toothed Rākṣasas around him,
  3. travelling high through the sky, he entered Ilaṅkai by the roaring sea,
  4. the lord of deep love, garlanded Vīṭaṇaṉ, going there that very day.

What the poem says

Vīṭaṇaṉ, travelling through the sky with his Rākṣasas, apparently in the Puṣpaka, drops Kukaṉ at Śṛṅgivērapuram and Cukkirīvaṉ at Kiṣkindhā, and reaches Laṅkā the same day.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kukaṉait taṉ patiyiṉ uyttu, kuṉṟiṉai valam cey tērōṉ
makaṉait taṉ purattil viṭṭu, vāḷ eyiṟṟu arakkar cūḻa,
kakaṉattiṉmicaiyē ēki kaṉai kaṭal ilaṅkai pukkāṉ
akaṉ uṟṟa kātal aṇṇal, alaṅkal vīṭaṇaṉ, ceṉṟu, aṉṟē.