கம்பராமாயணம் 1065 · பால 17.29

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையாற்
பற்றலும் அல்குலில் பரந்த மேகலை
அற்று உகும் முத்தின்முன் அவனி சேர்ந்தன,
பொற்றெடி ஒருத்தி கண் பொழிந்த முத்தமே.

பொருள் · Meaning in Tamil

முன் செற்றம் புரிந்தது ஒர் செம்மல் - முன்னர்ச் செய்த தவறு நினைந்த தலைவன் ஒருவன்; வெம்மையால் அல்குலில் பரந்த மேகலை பற்றலும் - (தன் மனைவி, தன் அத் தவற்றை நினைந்து கொண்டுள்ள ஊடலைத் தீர்க்கும்) விருப்பத்தால், அவள் இடைப்பகுதியில் பரவியிருந்த மேகலையைக் (கையினால்) பிடித்தவுடன்; அற்று உகு முத்தின் முன்பு - (ஊடல் நீடி அவள் எழத்தொடங்கியதால்) அம்மேகலையில் இருந்த முத்துக்கள் எல்லாம் அறுந்து (நிலத்தில்) வீழும் முன்பாகவே; பொற்றொடி ஒருத்திகண் பொறாத முத்தம் அவனி சேர்ந்தன - பொன்னாலான வளையணிந்த அம்மங்கையின் கண்களிலிருந்து (கணவன் செயலைப் பொறுக்காமல் எழுந்த) கண்ணீர் முத்துக்கள் நிலத்தில் வீழ்ந்தன.

பொற்றொடி - பொன்தொடி. அணி முத்து வீழும்முன் கண் மணிமுத்து வீழ்ந்தன என்று கணவன் குறை திருத்தும் மகளிர் நிறைச் சிறப்புக் கூறியவாறு. இடையிலிருந்து வீழ்வது முன்னும், கண்ணிலிருந்து வீழ்வது பின்னும் (இட உயர்வு கருதின்) வீழ்ந்திருக்க வேண்டும். ஆனால், உணர்ச்சியின் உயர்ச்சியினால் இடை முத்தை, கண் முத்து முந்திக் கொண்டது எனக் கூறுவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A lord who had done her wrong before, when in his ardour
  2. he caught hold of the girdle spread across her hips,
  3. then, before its pearls could snap loose and fall, down to the earth
  4. fell the pearls that the eyes of the gold-bangled woman could not hold back.

What the poem says

A husband who has wronged his wife tries to make up by catching hold of her jewelled girdle. She pulls away, the string snaps, and its pearls begin to fall.

But before they reach the ground, the pearls of her tears have already fallen. Logically the girdle's pearls, being lower down, should land first, but her feelings run so high that her tears outrace them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟṟam muṉ purintatu ōr cemmal, vemmaiyāl
paṟṟalum alkulil paranta mēkalai
aṟṟu uku muttiṉ muṉpu avaṉi cērntaṉa,
poṉ toṭi orutti kaṇ poṟāta muttamē.