கம்பராமாயணம் 1067 · பால 17.31

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருத்தி, ஊடினது தன் பாங்குளார்களோடு உரை செயாள் - ஒரு மங்கை, தான் தன் கணவனோடு பிணங்கியுள்ளதைத் தன் தோழியரோடு வாய்திறந்து சொல்லாதவளாய்; மாடகம் பற்றிய மகர வீணையை - முருக்காணி பொருந்திய மகரமீன் வடிவமைந்த வீணையினை; தன் தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள் - இதழ்கள் விரிந்த தாமரைப் பூப்போன்ற தன் கரங்கள் சிவப்புறும்படி தொட்டு; தன் உள்ளத்து உள்ளது பாடினள் - தன் உள்ளத்துள்ளே மறைந்த ஊடற் காரணங்களைத் (தன் கணவன் மட்டுமே குறிப்பால் உணர்ந்து கொள்ளுமாறு வீணையிலிட்டுப்) பாடினாள்.

தன் உள்ளத்துள்ளதைப் பாங்கிமார் அறியின் அவனைத் தூற்றுவர்; அதனை இவள்பொறாள் ஆதலின், “உரை செயாள்; பாடினாள்” என்றார். கணவன் குறையைப் பிறர் அறியாமல் பேணும் பெண்மையின் தனிப்பண்பு சுட்டினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She took hold of the tuning pegs, and touched the makara-shaped vīṇai
  2. till her hands, soft as opening blossoms, grew red;
  3. and so one woman sang; to her companions
  4. she would not tell of her quarrel, of what lay in her heart.

What the poem says

A woman has quarrelled with her husband but will not tell her friends why. If they knew, they would think badly of him, and she cannot bear that.

Instead she takes up her vīṇai and plays until her soft fingers turn red, putting her grievance into a song that only her husband will understand. The poet praises the loyalty that guards a husband's faults from other people.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṭakam paṟṟiṉaḷ; makara vīṇai taṉ
tōṭu aviḻ malark karam civappat toṭṭaṉaḷ;
pāṭiṉaḷ orutti, taṉ pāṅkuḷārkaḷōṭu
ūṭiṉatu uraiceyāḷ, uḷḷattu uḷḷatē.