கம்பராமாயணம் 1068 · பால 17.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குழைத்த பூங்கொம்பு அனாள் ஒருத்தி - தளிர்த்துள்ள பூங்கொடி போன்றாள் ஒருமங்கை; கூடலை இழைத்தனள் - (தன் கணவன் வருகையை யறியக்) கூடல் சுழிகளை (விரலால்) கீறினாள்; அது அவள் இட்ட போது எலாம் பிழைத்தலும் - (அக்கூடற்சுழிகள் கூடும் என்று நினைத்துக்) கீறிய போதெல்லாம் கூடாமல் போனதும்; அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் உழைத்தனள் - மன்மதன் இட்ட பிழையாத அம்புகளால் தூளாக்கப்பெற்று வருந்தினள்; உயிர் உண்டு என்ன உயிர்த்தனள் - உயிர் இவளுக்கு உண்டோ என்னும் ஐயம் தீர்க்க மூச்சு விட்டனள். கணவனைக் கூடுவது கூடுமோ என அறிய, விழிகளை மூடித் தரையில் சுழியிட்டு, சுழியின் இருமுனையும் கூடின், கணவனைக் கூடலாகும் என அறியும் ஒரு பண்டை வழக்கு. “கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப்பெறுவேனேல் கூடு என்று கூடல் இழைப்பாள் போல் கூடல் இழையாது இருந்தாள் பிழைப்பின் பிழைபாக்கு அறிந்து” (முத்தொள். 31).
ஆங்கிலம் · English translationAI
Translation
- A woman like a flowering bough in fresh leaf drew
- the kūṭal circle, and every time she drew it, it failed to close;
- she suffered under the never-failing arrows of the bodiless god,
- and only sighed, as if to show there was still life in her.
What the poem says
An old Tamil love-charm called kūṭal, "meeting", went like this. A woman shut her eyes and drew a circle in the sand with her finger. If its two ends met, she would soon be united with her lover.
This woman tries again and again, and every time the ends fail to meet. Pierced by the arrows of the bodiless love god, she can only sigh. That sigh is the one sign that she is still alive.