கம்பராமாயணம் 1069 · பால 17.33

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பந்து அணிவிரலினாள் ஒருத்தி பையுளாள் - (பந்தாடுகையில் ஏந்திய) பந்துக்கு அழகு செய்யும் விரலுடையாள் ஒருத்தி, பிரிவுத் துயரம் உடையவளாய்; சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள் - கட்டழகில் ஒப்பற்றவனாகிய தன் கணவனிடம் (தோழியைத்) தூது அனுப்பினாள்; வந்தனன் எனக் கடை அடைத்து மாற்றினாள் - அவன் வந்தானாக வாயிற்கதவை அடைத்துத் (உள்ளே வர இயலாதவாறு) தடுத்தாள்; சிந்தனை தெரிந்திலம்; நாட்டம் சிவந்த - (அவளது) எண்ணம் இன்னதென யாம் அறிய இயலவில்லை; (அவள்) கண்கள் (மட்டும்) (வெகுளியால்) சிவந்த வண்ணம் இருந்தன.

'தூது வந்தால் அன்றி, வர இயலாதோ?' எனக் கணவன் மாட்டுச் சினத்தாள் போலும். இல்லம் தன் சாம்ராச்சியம் ஆதலின் தலைவன் தன் மாட்டு அன்பில்லாத எதிரி எனக்கருதி, மன்னர் கோட்டைக் கதவை யடைத்துத் தாழிடல் போல, தன் இல்லக்கதவினை யடைத்துத் தாழிட்டாள் என்க. உண்மை அன்பு இல்லையென்று குற்றம் சுமத்தியபடி. நுணுகியுணரவேண்டிய புலவி இது வாதலின் இது புலவிநுணுக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One woman, whose fingers graced the ball she played with, sick with longing,
  2. sent a messenger to a handsome man;
  3. when he came, she shut the door on him and turned him away;
  4. what was in her mind we cannot tell, but her eyes were red.

What the poem says

A lonely woman sends her friend to fetch her husband. When he arrives, she slams the door in his face. The poet says he cannot tell what she was thinking, only that her eyes were red with anger.

The commentary guesses that she was hurt he would come only when sent for and not of his own accord. Her house is her kingdom, and she barred its gate against him as a king bars his fort against an enemy who does not love him. A lovers' tiff this fine needs close reading to understand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pantu aṇi viraliṉāḷ orutti paiyuḷāḷ
cuntaraṉ oruvaṉpāl tūtu pōkkiṉāḷ
vantaṉaṉ eṉak kaṭai aṭaittu māṟṟiṉāḷ
cintaṉai terintilam civanta nāṭṭamē.