கம்பராமாயணம் 1071 · பால 17.35

Section பால காண்டம் / 17. உண்டாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விதைத்த மென் காதலின் வித்து மெய்ந் நிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்தவே எனப்
பதைத்தனள் ஒருத்தன்மேல் ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே.

பொருள் · Meaning in Tamil

ஒருத்தி, பதைத்தனள் ஒருத்தன் மேல் பஞ்சு அடிஉதைத்தலும் - ஒரு மங்கை, (தன் கணவன்மேல் கொண்ட ஊடலால்) பதைபதைத்தவளாகி, அவனைத் தன் பஞ்சனைய மெல்லடியால் உதைத்தவுடன்; வெஞ்சிறை இதைப்புனல் நனைத்திட - கடிய வேலியையுடைய (உடம்பாகிய) தினைப்புனத்தில் (உதையால் உண்டாகிய இன்பப் புனல்) நனைத்ததனால்; விதைத்த மென்காதலின் வித்து முளைத்ததே என - விதைக்கப்பட்ட மெல்லிய காதலாகிய முளைகள் (உடனே) முளைத்து விட்டதைப்போல; உரோம ராசி பொடித்தன - அவன் உடம்பில் உள்ள மயிர்க்கூட்டங்கள் சிலிர்த்து நின்றன.

பிற விதைகள் காலந்தாழ்த்து முளைக்கும்; காதல் விதை உடனே முளைக்கும் எனக் கூறி வியந்தவாறு. அவள் பாதம் பட்டவுடன் அவன் புளகாங்கிதம் அடைந்தான்; உரோமஞ்சலி உண்டாயிற்று என்பதை அழகுற உருவகித்தார். உடம்பைக் கொல்லையாகவும், காதலை வித்தாகவும், விதைத்த இன்பத்தை நீராகவும், உரோம ராசியைக் காதல் முளையாகவும் உருவகித்தார். ஒருத்தி பதைத்தனள்; உதைத்தலும் இதைப் புனல் நனைத்திட, விதைத்த மென்காதலின் வித்து முளைத்தவே யென உரோம ராசி பொடித்தன எனக் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the seed of tender love already sown
  2. had sprouted once water soaked the cleared field inside its stern fence,
  3. when one woman, all aflutter, kicked a man with her cotton-soft foot,
  4. the hairs on his body stood on end.

What the poem says

In a fit of temper a woman kicks her husband with her soft foot, and the touch sends a thrill through him so that his hair stands on end.

The poet builds an extended metaphor. His body is a fenced field, his love is the seed already sown in it, the pleasure of her touch is the water, and his bristling hair is the crop of shoots. Other seeds take time to sprout, but the seed of love comes up at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vitaitta meṉ kātaliṉ vittu veñ ciṟai
itaip puṉal naṉaittiṭa muḷaittatē eṉa
pataittaṉaḷ oruttaṉmēl orutti pañcu aṭi
utaittalum poṭittaṉa urōma rāciyē.