கம்பராமாயணம் 1104 · பால 18.2

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்றத்
துப்பு உடை மணலிற்று ஆகிக் கங்கைநீர் சுருங்கிக் காட்ட,
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,
உப்பு உடைக் கடலும் தெள் நீர் உண் நசை உற்றது அன்றே.

பொருள் · Meaning in Tamil

கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற - பிளவுபட்ட நாக்கினையுடைய நாகர்களின் உலகம் ஆகிய பாதாள லோகமும் கண்ணுக்குத் தோன்றுமாறு; துப்புடை மணலிற்று ஆகக் கங்கை நீர் சுருங்கிக் காட்ட - தூய்மையுடைய மணலைப் பெற்றதாய், கங்கைநதி தண்ணீர் குறைந்து தோன்றும்படி; அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த - அம்பு முதலிய ஆயுதங்கள் மிகுந்த அந்தச் சேனா சமுத்திரம், அகன்று கிடந்த அக்கங்கை நீரை எடுத்துப் பருகியதனால்; அன்று, உப்புடைக் கடலும் தெண்ணீர் உள்நசை யுற்றது - உப்புத்தன்மையுடைய (உவர் நீர்க்) கடலும் அப்பொழுது தெளிந்த அக்கங்கையின் நீர் (போய்ச் சேராததனால்) நீர் வேட்கை கொண்டது. உப்புக் கடலுக்குச் சென்று சேரும் கங்கையை, சேனைக் கடல் உண்டு விட்டது என்பதாம். உப்பு நீர் தாகம் தீர்க்காது, அதனை மிகுதிப் படுத்தும். ஆதலால் உப்புக் கடலை உண்டு தன் தாகம் தீர்த்து வந்தது. இன்று, தசரதன் படைக் கடல் கங்கைப் பெருக்கை உண்டு விட்டதனால், உப்புக்கடலாகிய சமுத்திரம் அன்று தாகம் மிகக் கொண்டது என்று, சேனையின் பெருமை கூறியவாறு. உயர்வு நவிற்சியணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that even the world of the fork-tongued Nākas came into view
  2. and the Gaṅgā's water shrank to show its clean sand,
  3. that sea of an army, bristling with arrows, scooped up its broad waters and drank them,
  4. and then the salt sea itself was seized with a thirst for clear water.

What the poem says

Tacarataṉ's army is so vast that when it camps on the banks of the Gaṅgā and drinks, the river almost runs dry. Its bed shows bare sand, and you could nearly see down to the underworld of the serpent people.

The salt ocean usually quenches its thirst with the Gaṅgā's fresh water, since salt water cannot slake thirst. That day it gets none, and goes thirsty. It is deliberate exaggeration to show the size of the army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kappuṭai nāviṉ nākar ulakamum kaṇṇil tōṉṟa
tuppuṭai maṇaliṟṟu āka kaṅkai nīr curuṅkik kāṭṭa,
appuṭai aṉīka vēlai akaṉ puṉal mukantu mānta,
uppuṭaik kaṭalum teṇ nīr uṇ nacai uṟṟatu aṉṟē.