கம்பராமாயணம் 1112 · பால 18.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துகள் - (அச்சேனையின் இயக்கத்தால் எழுந்த) புழுதி; சூழும்மா கடல் எலாம் திடர்பட - (உலகைச் சூழ்ந்துள்ள) கடல்கள் எல்லாம் மேடாகும்படி; தவழ்ந்து ஏழு பாரகமும் உற்று உளது எனற்கு எளிது - பரவிச் சென்று, மேல் ஏழ் உலகத்திலும் போய்ப் பரவியது என்று சொல்லுதற்கு (வழி) (மிக) எளிதேயாம்; ஆழியான் உலகு அளந்த அன்று - (எங்ஙனம் எனில்) சக்கரப் படையையுடைய திருமால், உலகங்களை அளந்த அக்காலத்தில்; தாள் சென்ற அப்பூழையூடே பொடித்து - (அவனது) திருவடி என்று (மேலே துளைத்துச்) சென்ற அந்த (அண்டகடாகத்து மேல் முகட்டுத்) துளைவழியினூடே நுழைந்து சென்று; அப்புறம் போயது - (இவ் வண்டத்துக்கு வெளியே உள்ள) அவ்வண்டத்திலும் (அத்தூளி) பரவிற்று. ஆழியான் திருவடிகள் உலகளந்த அன்று உண்டாக்கிய துளையின் வழியால் படையால் எழுந்த புழுதி வெளியண்டத்திலும் பரவுதல் எளிதாயிற்று என்க. இன்றேல், இவ்வுலகம் புழுதி மிகுதியால் திக்குமுக்காடியிருக்கும் என்பது கருத்து. அண்ட கடாகத்திலும் தூளி பரவிற்று என்றதனால், இவ் வேழ் உலகில் பரவியமை சொல்ல வேண்டா ஆயிற்று. அரோ - அசை. உயர்வு நவிற்சியணி. பூழை - சிறுதுளை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The dust, drifting until all the great encircling seas were turned into mounds,
- is it hard to say it reached all seven worlds?
- Through the very hole His foot made, the day He of the discus measured the worlds,
- it burst through and went out beyond.
What the poem says
The dust raised by the marching army is so thick that it fills up the oceans until they become dry mounds. Saying it reached all seven upper worlds would be easy.
It goes further. When Tirumāl, as Vāmaṉa, grew huge and measured the universe in three strides, his foot is said to have pierced the shell of the cosmic egg. The dust escapes through that hole into the space beyond. Otherwise, the commentary jokes, the world would have choked. It is deliberate exaggeration.