கம்பராமாயணம் 1113 · பால 18.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மன்நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறை தர - அந்தச் சேனையில் மன்னர்களின் நீண்டகுடைகள் நெருங்கி, (அதனால்) வானம் முழுவதும் மறைபட; துன்னிடும் நிழல் வழங்கு இருள்துரப்பு எளிது - (அங்கு) நிறைந்த நிழலானது தருகின்ற இருட்டை ஓட்டுவது எளியதேயாம்; பொன் இடும் பூண்இடும் புனைமணிக் கலன் எலாம் மின் இடும் - (எங்ஙனமெனில்) பொன்னால் செய்யப்பட்ட அணிகளை இட்டு (அதன் மேல்) அழகிய மணிகளைப் பதித்த (அச்சேனையினர்) ஆபரணங்கள் எல்லாம் மின்னலைப்போல் ஒளிவிடும்; வில்இடும் - பன்னிற மணிகள் (தம்) ஒளிவீச்சால் வானவில் போல் பலநிற ஒளிகள் சிந்தும்; வெயில் இடும் - (சில மணியாபரணங்கள்) கதிரவனின் வெப்ப ஒளியை வீசும்; நிலவு இடும் - (சில மணியணிகள்) சந்திரனின் குளிர்ந்த ஒளிகளை உமிழும்.
‘புவியிடும்’ எனும் பாடத்திலும் “பூண் இடும்” எனும் பாடம் பொருட்சிறப்புடையது. இறுதியிரண்டடிகள் உயர் கவிகளுக்கேயுரிய சொல் இன்பச்சுவை பிலிற்றி நிற்றலை ஓதி யுணர்க. படையின் செலல், இருள் நீங்கி ஒளிமிகுவதை “எரிந்தெழுபல் படை” (கம்ப. 8329) எனும் பாடலிலும் உரைப்பார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the kings' tall parasols crowding close so that the sky was hidden,
- is it hard to drive away the darkness that the gathered shade gives?
- All their jewellery of gold and ornaments, set with fine gems,
- flashed out lightning, rainbows, sunshine and moonlight.
What the poem says
The kings' parasols are packed so close that they hide the sky and plunge the army into shade. Yet the darkness is easily driven off.
The soldiers' gold ornaments set with gems flash like lightning. Gems of many colours throw out rainbows, some blaze like the sun, and some glow with the cool light of the moon. The last two lines are admired for their music, a run of short verbs that all mean "gives off".