கம்பராமாயணம் 1116 · பால 18.14

Section பால காண்டம் / 18. எதிர்கொள் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்றல் அம்கோதையார் மணியினும் பொன்னினும் - மணம் மிக்க அழகிய மாலையினை யணிந்த மகளிரது பொன் ஆபரணங்களிலும், மணியாபரணங்களிலும்; அச்சிதைவிலா நேர் நிழலின் சென்று வந்து உலவும் - (அங்குள்ள சேனைகளின் வெண்குடை, கொடி முதலியவற்றின்) சிதைவில்லாத (எதிர் ஒளி) நிழல்கள் நேராகச் சென்று உலாவி வரும்; வென்ற திண்கொடியோடும் - இவற்றோடு வெற்றிக்கு அறிகுறியான வலிய துவசங்களுடன்; விதானமும் விராய் - மேற்கட்டிகளும் கலந்து நின்ற; வெண் குடைகளின் நிழல்களே - வெண் கொற்றக் குடைகளின் நிழல்களே; நிழல் எலாம் - அவ்வழியில் உள்ள) நிழல்கள் எல்லாம்.

இரு மன்னர்களின் குடைகள் இன்றும் நிழல் தரத் தவறவில்லை என்றபடி. எதிர் ஒளிபட்டு வரும் ஒளிகளில் வெப்பம் வாராது குளிர்வே வரும் என்பது அன்றே உணர்ந்திருந்தனர் என்பது. “மன்றலங்கோதையார் மணியினும் பொன்னினும் சென்று வந்து உலாவும் அச்சிதைவு இலா நிழல்” என்றார். சந்திரன் ஒளி குளிர்வதற்கும் அது சூரியனின் எதிர் ஒளியாவதே காரணம் என்பார். மகளிர் அணியில் பட்டு வரும் எதிர் ஒளி நிழலும், கொற்றக் குடை நிழலும் அங்கு நிழல் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the fragrant, lovely garlanded women, in their gems and in their gold,
  2. that flawless reflected shade went and came and wandered; and, straight with it,
  3. mingled with strong banners of victory and tall canopies,
  4. stood the shade of the white parasols: these were all the shade there was.

What the poem says

Tacarataṉ's army is marching to Mithilā and Caṉakaṉ's army has come out to meet it. The poet describes the shade over the road: there is no shade of trees to speak of, only the cool glints reflected from the women's gold and jewels, and the shade of the white royal parasols, banners and canopies carried by the two hosts.

The point is that the reflected light is cool, not hot, as moonlight is cool because it is the sun's light reflected; the parasols of two kings together give the travellers all the shelter they need.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṟal am kōtaiyār, maṇiyiṉum poṉṉiṉum,
ceṉṟu vantu ulavum, ac citaivu ilā niḻaliṉ nēr
veṉṟa tiṇ koṭiyoṭum neṭu vitāṉamum virāy
niṉṟa, veṇkuṭaikaḷiṉ niḻalumē niḻal elām.