கம்பராமாயணம் 1117 · பால 18.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாறு இலா மதுகையான் வருபெருந்தானை மேல் - ஒப்பிலாத வலிமையுடைய தசரதனுடையதாய் வருகின்ற பெரிய சேனைக்கு எதிரே; ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது - மேன்மேற் பொங்குகின்ற பெருங்களிப்பையுடைய சனகனது சேனை வந்து சேர்ந்த அப்போது; ஈறுஇல் ஓதையினொடும் எறிதிரைப் பரவைமேல் - எல்லையில்லாத ஓசையுடனே வீசுகின்ற அலைகளையுடைய கடலின் மேலே; ஆறுபாய்கின்றது ஓர் அமலை போல் ஆனது - ஆறு ஒன்று சென்று பாய்கின்றதனால் உண்டாகிற ஓசைபோல ஒரு பேராரவாரம் உண்டாயிற்று.
இங்கும் தசரத சேனை மிகப் பெரியது எனக் குறிக்கக் கடலை உவமித்தார்: சனக சேனை அவ்வளவு பெரியது அன்று என்று உணர்த்த ஆற்றை உவமித்தார். இரண்டு சேனைகளும் கடலும் ஆறும் சந்திப்பது போன்ற பேர் ஆரவாரத்தோடு சந்தித்தன என்றார். எதிர் கொள் படலம் எனும் படலப் பெயர் இப்பாடலால் விளங்கும். மாறு - ஒப்பு. “மாறின்மையின் மறம்வாடும் என்று இளையோரையும் எறியான்” (சீவக. 26/) என்புழிப் போல.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Upon the great army that came with the king of matchless strength,
- when the host of the one brimming with great joy arrived and met it,
- it became like the roar when, with endless sound, upon the wave-tossed sea
- a river comes rushing in.
What the poem says
The two armies meet: Caṉakaṉ's host, full of joy, comes out from Mithilā to receive the immense army of Tacarataṉ. Their meeting raises a tumult like the roar where a river pours into the surging ocean.
The simile is weighted: Tacarataṉ's army is the sea, Caṉakaṉ's the smaller river. This verse gives the chapter its name, the Chapter of the Welcome (going out to meet a guest).