கம்பராமாயணம் 125 · பால 3.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்ணிடைக் கனல் சொரி களிறு - (கோபத்தால்) கண்களிலே நெருப்பைச் சொரியும் ஆண்யானைகள்; கால் கொடு மண்ணிடை வெட்டுவ - கால்களால் நிலத்தை வெட்டுவனவாம்; வேட்கை மைந்தர்தம் - பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின்; பண்ணைகள் பயில் இடம் - விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்; குழி படைப்பன - குழிகளை உடையனவாம்; அக்குழிகளைச் சுண்ணம் தொடர்ந்து தூர்ப்பன - அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.
இளங் குமரர்கள் யானைகளை உடன் கொண்டு சென்று விளையாடுவர். அந்த யானைகள் நிலத்தைக் காலால் வெட்டி குழி செய்கின்றன. அக்குழிகள் வாசனைப் பொடிகளால் தூர்க்கப்படுகின்றனவாம். பண்ணை - விளையாட்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bull elephants, fire pouring from their eyes,
- dig the ground with their feet; the places where young men full of desire
- hold their games become full of pits;
- and the fragrant powder they wear keeps on filling those pits up.
What the poem says
A scene of youthful sport. Young men play with their war elephants, and the angry beasts paw the ground into hollows.
So much perfumed powder falls from the young men's bodies as they play that it fills the pits up again. The image is a measure of the city's wealth and luxury.