கம்பராமாயணம் 126 · பால 3.45

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பந்துகள் பயிற்றுவார் மடந்தையர் இடை - பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து; முத்தினம் சிந்துவ - (அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன; அவை திரட்டுவோர் - அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும்; அந்தம் இல் சிலதியர் - அளவில்லாத பணிப் பெண்கள்; ஆற்ற குப்பைகள் - குவித்த அந்த முத்துக் குவியல்கள்; சந்திரன் ஒளிகெட தண் நிலா தழைப்ப - சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா ஒளி தழைப்பனவாம்.

பெண்கள் பந்து விளையாடும் இடங்களில் அணிகலன் முத்துகள் சிதறி விழ, பணிப்பெண்கள் அவைகளை எல்லாம் சேகரித்து ஆங்காங்கு குவித்து வைக்கின்றனர். அந்தக் குவியல்கள் சந்திர ஒளி கெடுமாறு - வெண்மைநிற ஒளியை உடையனவாய் விளங்குகின்றன.

பயிற்றுவார்: ஆடுகின்ற மகளிர் தன் வினைப் பொருளில் வந்த பிற வினையாலணையும் பெயர். சிலதியர்: குற்றேவல் மகளிர்.

‘ஆற்றின்’ என்ற பெயரெச்சத்தின் இன் என்னும் இடைநிலை தொக்கு, ‘ஆற்ற’ என நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the girls play with their balls, among them
  2. pearls scatter; the countless maidservants
  3. who gather them pile them in heaps,
  4. and these spread a cool moonlight that makes the moon's own light fade.

What the poem says

Girls playing ball shake pearls loose from their jewellery. Servant girls sweep them into heaps.

The heaps of pearls are so many and so white that they glow with a cool light that puts the moon to shame.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pantukaḷ maṭantaiyar payiṟṟuvāriṭaic
cintuva muttiṉam; avai tiraṭṭuvār
antam il cilatiyar; āṟṟa kuppaikaḷ
cantiraṉ oḷi keṭa, taḻaippa taṇ nilā.