கம்பராமாயணம் 1254 · பால 21.21

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அஞ்சன ஒளியானும் - அஞ்சன மை போன்ற கருநிறங் கொண்ட (திருமாலாகிய) இராமனும்; அலர்மிசை உறைவாளும் - தாமரைப் பூவில் வாழ்பவளாம் திருமகளாகிய சீதையும்; எஞ்சல் இல் மணம் நாளைப் புணர்குவர் எனலோடும் - நாளை (ஒருவகையிலும்) குறைவில்லாத திருமணம் கூடுவார்கள் என்று முரசறைந்த செய்தி கேட்டவுடன்; தினகரன், மஞ்சனை அணிகோலம் காணிய எனச் செஞ்சுடர் இருள் கீறி ஒருதேர்மேல் வந்தான் - சூரியன், தனது குல மைந்தனான இராமனின் திருமணக் கோலத்தைக் காணத் (அவாவிப் புறப்பட்டான் போல) தனது ஒப்பற்ற தேர்மேல் தன் சிவந்த ஒளிக்கற்றைகளால் இருளைக் கீறிக் (கீழ்வானில்) உதித்தான்.

குலப்பாட்டன் கொள்ளுப்பேரன் திருமணம் காண வந்தாற்போல வந்தான் எனச் சூரிய உதயத்தை இடம் காலத்திற்கேற்றவாறு புனைந்துரைக்கும் திறம் காண்க. ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.

அஞ்சனம் கருமை நிறம் உடையதேனும், அதுவும் ஒளி கூடியதாயின் இராமன் நிறத்துக்கு ஒவ்வும் என்பார், “அஞ்சன ஒளியானும்” என்றார். எனவே, கருமையில் ஒளிகூடின் காகுத்தன் நிறமாகும் என்றவாறு. “அலர் மிசை உறைவாளும்” என்பது, அஞ்சன ஒளியானின் இதய அலர்மிசை உறைவாளும் எனும் பொருளும் தோன்ற நிற்பது காண்க. அவள் விளையாடிடம் என் மனம் (கம்ப. //77) என்று சற்று முன்பு பெருமான் கூறியுள்ளமை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as it was said that he of collyrium's glow and she who dwells upon the lotus
  2. would be joined tomorrow in a flawless marriage,
  3. the sun, tearing the darkness with his red rays, came on his one chariot,
  4. as if to see the wedding finery of his descendant.

What the poem says

Dawn comes on the wedding day. The poet presents the sunrise as the sun hurrying out in his chariot, slashing the darkness with red rays, because he wants to see his descendant Irāmaṉ, a prince of the solar line, dressed as a bridegroom: an ancestor arriving for his great-grandson's wedding.

Irāmaṉ is called 'he who shines like collyrium', dark yet radiant, the colour of Viṣṇu; Cītai is 'she who dwells on the lotus', Lakṣmī. The commentary suggests that the lotus she dwells on is also Irāmaṉ's heart, which he had just called her playground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1añcaṉa oḷiyāṉum, alarmicai uṟaivāḷum,
eñcal il maṇam nāḷaip puṇarkuvar eṉalōṭum,
ceñ cuṭar iruḷ kīṟit tiṉakaraṉ oru tērmēl
mañcaṉai aṇi kōlam kāṇiya eṉa vantāṉ.