கம்பராமாயணம் 1261 · பால 21.28

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்டியில் நிறைவாசப் பனிமலர் கொணர்வாரும் - வண்டிகளிலே நிறைந்த வாசமுடைய குளிர்ந்த மலர்களைக் கொண்டு வருபவர்களும்; தண்டலை இலையோடு கனிபல தருவாரும் - சோலைகளிலேயுள்ள (வாழை முதலிய) இலைகளையும் (பல்வகைக்) கனிகளையும் கொண்டு வருபவர்களும்; குண்டலம் வெயில்வீசக் குரவைகள் புரிவாரும் - தங்கள் குண்டலம் என்னும் காதணிகள் (அசைவதனால்) ஒளி வீசப் (பலர் கை கோத்து ஆடும்) (குரவைக் கூத்து) ஆடுபவரும்; உண்டைகொள் மதவேழத்து ஓடைகள் அணிவாரும் - கவளம் கவளமாக உண்ணும் வழக்கமுடைய மதயானைகளின் நெற்றியில் முக படாங்களை அணிகின்றவர்களும் (ஆயினர்).

வெயிற்கடுமை நீங்க, பொது இடங்களில் பரப்பவும் பந்தர் இடவும் இலைகளையும், மலர்களையும், விருந்தோம்புதற்குக் கனிகளையும் வண்டி வண்டியாகக் கொண்டுவந்தனர் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some brought cool flowers full of fragrance by the cartload,
  2. some brought leaves from the groves together with many fruits,
  3. some danced the kuravai, their earrings flashing in the sun,
  4. some put the forehead plates on the musth elephants that eat in balls.

What the poem says

Carts arrive loaded with fragrant flowers, and with leaves and fruit from the groves: leaves to spread in public places and to roof the shelters against the heat, fruit to feed the guests.

Groups dance the kuravai, a round dance with linked hands, their earrings catching the sun. Others fit ornamental plates on the foreheads of the rutting elephants, which are fed by the mouthful on balls of rice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭiyil niṟai vācap paṉi malar koṇarvārum,
taṇṭalai ilaiyōṭu kaṉi pala taruvārum,
kuṇṭalam veyil vīcak kuravaikaḷ purivārum,
uṇṭai koḷ mata vēḻattu ōṭaikaḷ aṇivārum.