கம்பராமாயணம் 1262 · பால 21.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கலவைகள் புனைவாரும் - கலவைச் சந்தனங்களைப் பூசிக் கொள்வாரும்; கலைநல தெரிவாரும் - நல்ல ஆடைகளை ஆராய்ந்து அணிந்து கொள்வாரும்; மலர் குழல் மலைவாரும் - கூந்தலிலே மலர்களைச் சூடிக் கொள்வாரும்; மதிமுக மணி ஆடித்திலகம் முன் இடுவாரும் - அழகிய கண்ணாடிமுன் நின்று, தம் மதிப்போன்ற முகங்களில் திலகத்தை இட்டுக் கொள்வாரும்; சிகழிகை அணிவாரும் - சிகழிகை என்னும் தலைமாலைகளை அணிந்து கொள்வாரும்; இலவு இதழ்பொலிகோலம் எழில்பெற இடுவாரும் - இலவம் பூப்போலச் சிவந்த தங்கள் அழகிய உதடுகளிலே அழகுறக் கோலம் இட்டுக் கொள்பவர்களும் (ஆயினர்).
இறுதியடிக்கு இலவின் இதழ் போன்ற செம்பஞ்சுக் குழம்பினை (அடிகளில்) இட்டுக் கொள்வாரும் எனவுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some put on mixed sandal paste, some chose fine garments,
- some wore flowers in their hair, some, before bright mirrors,
- first marked a tilakam on their moon-like faces, some put on head garlands,
- some painted beautiful designs on lips as red as silk-cotton petals.
What the poem says
The women of Mitilai get dressed for the wedding. They rub on blended sandal paste, choose their best clothes, put flowers in their hair, stand before mirrors to put the tilakam mark on their moon-like faces, put on garlands made for the head, and paint their lips, red as the petals of the silk-cotton tree.
The commentary offers another reading of the last line: they put red lac dye, the colour of those petals, on their feet.