கம்பராமாயணம் 1263 · பால 21.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயில் அன்னார் - மயில் அனைய சாயற் பெண்டிர்; ஒப்பனை புரிபோதும் - அலங்காரம் செய்கின்ற காலத்தும்; ஊடலின் உகுபோதும் - ஊடற்காலத்தில் வெகுண்டு வீசுகிற காலத்தும்; தப்பின மணிகாசும் சங்கமும் துப்புறழ் இளவாசச் சுண்ணமும் உதிர்தாதும் - உதிர்ந்து வீழ்ந்த மணிகளையும், (தங்கக்) காசுகளையும், சங்கு வளையல்களையும், பவழம்போன்று சிவந்த மெல்லிய வாசமுடைய நறுமணப்பொடிகளையும், உதிரும் இயல்புடைய பூந்துகள்களையும்; குப்பைகள் எனவாரிக் கொண்டனர் களைவாரும் - (களையத்தக்க) குப்பைகள் போல, குவியலாக வாரித்திரட்டிக்கொண்டு போய் அப்பால் எறிபவர்களும் (ஆயினர்).
விலையுயர்ந்தவெனக் கருதும் பொருள்கள் எல்லாம் அந்நகரப் பெண்டிர்க்கு மிக இழிந்த குப்பைகளாயின என்று நகரின் மிகுவளம் கூறியவாறு. மிதிலை நகரத்துக் குப்பைகளின் மூலப் பொருள்கள் இவையென வியந்தவாறுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gems, gold coins and conch bangles that slipped from the peacock-like women
- while they were dressing, or were flung off in lovers' quarrels,
- and the young fragrant powder red as coral, and the fallen pollen:
- some swept these up like heaps of rubbish and threw them away.
What the poem says
A picture of Mitilai's wealth. Jewels, gold coins and conch-shell bangles drop from the women as they dress, or get thrown down in lovers' tiffs, along with spilt red scented powder and fallen pollen. Sweepers gather all of it into heaps and throw it out as rubbish.
What anywhere else would be treasure is just litter in this city. The commentary adds that one might marvel at the materials that make up Mitilai's garbage.