கம்பராமாயணம் 1264 · பால 21.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மன்னவர் வருவாரும் - (திருமணத்திற்கென) அரசர்கள் வந்து சேர்பவர்களும்; மறையவர் நிறைவாரும் - வேதியர்கள் வந்து நிறைபவர்களும்; இன்இசை மணியாழின் இசைமது நுகர்வாரும் - இனிய இசை பொழிகின்ற அழகிய யாழ் இசையெனும் தேனைநுகர்பவர்களும்; சென்னியர் திரிவாரும் - (இன்னிசை பாடியவாறே) பாணர்கள் (எங்கும்) சஞ்சரிப்பவர்களும்; விறலியர் செறிவாரும் - விறல்படப் (பாணர்பாட்டுக்கேற்ப) ஆடும் விறலியராகிய மகளிர் நெருங்குவாரும்; கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும் - நாழிகை வட்டில்களைக் கொண்டு, திருமண நேரத்தைத் (துல்லியமாக) ஆராய்ந்து கொண்டிருப்பவர்களும் (ஆயினர்). வருவாரும், நிறைவாரும், நுகர்வாரும், திரிவாரும், செறிவாரும், தெரிவாரும் எனும் வினைகளை அடுக்கியே மணம் நிகழவுள்ள மிதிலை நகரின் ஆரவாரத்தையும், ஆர்வத்தையும் துடிப்பையும் கற்பார் மனக்கண்முன் கொண்டுவந்து காட்டி விடுகிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kings kept arriving, Brahmins thronged in,
- some drank in the honey of sweet music from jewelled lutes,
- minstrels wandered about, dancing women crowded close,
- and some, with water clocks, worked out the hours for the wedding.
What the poem says
Kings arrive for the wedding and Vedic Brahmins fill the city. People drink in the music of the yāḻ, the Tamil harp; wandering bards roam the streets singing, and the dancing women who perform to their songs crowd in. Meanwhile astrologers use water clocks, bowls that sink after a fixed interval, to fix the auspicious hour exactly.
The poet strings together a row of short verbs, arriving, filling, drinking, wandering, crowding, calculating, so that the reader feels the bustle and excitement of the city.