கம்பராமாயணம் 1265 · பால 21.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கணிகையர் தொகுவாரும் - நடனம் முதலிய கலைகளில் வல்ல கணிகையர் திரளாகக் கூடுவாரும்; கலைபல பயில்வாரும் - அறுபத்து நான்கு வகைக் கலைகளிற் பலவற்றின் திறங்காட்டப் பயின்று கொண்டிருப்பாரும்; பல இருநில மன்னர் பணிஅணி இனமுத்தம் - பல வகைப்பட்ட பெருநில மன்னர்களின் ஆபரணங்களில் அணிந்துள்ள சிந்திய பலவகை முத்துக்களும், அணிநெடுமுடியொன்று ஒன்று அறைதலின் உகும் அம்பொன்மணி - அழகிய நீண்ட (தத்தம்) கிரீடங்கள் ஒன்றொடொன்று நெருங்குதலால் சிந்துகின்றனவும் ஆகிய அழகிய பொன்களும் மணிகளும்; மலைதொகு மன்னன் வாயிலின் மிடைவாரும் - மலையாகக் குவிந்து கிடக்கிற சனக மன்னனின் அரண்மனை வாயிலிலே நெருங்குபவர்களும் (ஆயினர்).
மன்னர்கள் நெருக்கத்தால், அற்றுவீழ்ந்த மணியணிகள் அரண்மனையின் ஆசார வாசலில் மலையெனக் குவிந்தன என்க. உயர்வுநவிற்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Courtesans gathered in crowds, some rehearsed their many arts,
- and the pearls from the ornaments of the many kings of the wide earth,
- and the fine gold and gems that fell as their tall crowns struck one another,
- piled up in mountains at the king's gate, where some crowded in.
What the poem says
Courtesans skilled in dance gather in groups, and performers rehearse the arts they will display. So many kings press together at the gate of Caṉakaṉ's palace that their tall crowns knock against each other. Pearls, gold and gems shaken loose from their crowns and ornaments pile up at the gate like mountains.
The commentary marks this as deliberate exaggeration, used to show the size of the royal crowd.