கம்பராமாயணம் 1266 · பால 21.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேடகம் வெயில் வீச - (இடக்கையில் ஏந்தும் பொன் பொதிந்த) கேடயம் (பொன்னிற) வெயிலை உமிழவும்; கிளர் அயில் நிலவு ஈன - (வலக்கையில் ஏந்திய) கூர்மையான வேல் நிலவின் ஒளியை வீசவும்; கோடு உயர்நெடுவிஞ்சைக் குஞ்சரம் அதுபோல - கொம்புகள் நீண்ட போர்த் தொழில்வல்ல யானைகள்போல்; ஆடவர் திரிவாரும் - ஆண்கள் (பீடுநடையோடு) உலாவவும்; அரிவையர் களிகூர நாடகம் நவில்வாரும் - பெண்டிர் (அந்த ஆடவர்) மகிழ்ச்சி மிகுதற்கு ஏதுவான நடனங்களை ஆடவும்; நகை உயிர் கவர்வாரும் - (அவ்வாறு அவர் ஆடும் நடனத்திடையே) புன்னகை பூக்கவும், ஆடவர் உயிரை அவர்கள் கொள்ளை கொண்டனர்.
விழாக் காலங்களில் விளையாட்டுப் போர் நிகழ்த்திக் காட்டுதல் வழக்காதலின், அவர்கள் கேடயமும், வேலும் ஏந்தி, போர்த்திறங்களை நடித்துக் காட்டினர் என்க. “ஆடவர் திரிவார்; அரிவையர் கவர்வார்” என்று அழகுறக் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With shields giving off sunlight and gleaming spears giving off moonlight,
- like tall, long-tusked elephants trained in skill,
- men strutted about; women danced and acted
- to fill them with delight, and with their smiles carried off their lives.
What the poem says
Festivals were an occasion for mock battles, and the young men parade with gilded shields that flash like the sun and spears that gleam like the moon, moving with the proud gait of trained war elephants.
The women perform dances to delight them, and their smiles capture the men's hearts entirely. The poet balances the two groups neatly: the men stride about, the women steal their lives away.