கம்பராமாயணம் 1267 · பால 21.34

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கதிர் மணி ஒளி காலக் கவர் பொருள் தெரியா ஆறு
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்
மது விரி குழலாரும், மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓரார், அலமரல் உறுவாரும்.

பொருள் · Meaning in Tamil

கதிர் மணி ஒளி கால - ஒளிக்கற்றைகளையுடைய மாணிக்கங்கள் ஒளியை உமிழ்தலால்; கவர்பொருள் தெரியாவாறு - கண் ஒளி சென்று பற்றக் கூடிய பொருள்கள் தெரியாத வண்ணம்; எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின் - எதிர்வருவார் அணிகளின் ஒளி, அவர்கட்கு எதிர் வருவார் அணிகளின் ஒளியோடு மோதி எதிர்ஒளித்துப் பரவுவதால்; இளையோரும் மதுவிரி குழலாரும் மதிலுடை நெடு மாடம் அது இது என ஓராது - (கண்கள் கூசுவதால்) அந்நகரத்து இளைஞர்களும், தேன்வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடைய மங்கையரும் தங்கள் தங்கள் மதில் சூழ்ந்த நெடியமாட வீடு அதுவோ இதுவோ என அறியமாட்டாது; அலமரல் உறுவாரும் - மனஞ் சுழல்பவர்களும் (ஆயினர்).

ஒளியும் ஒளியும் மோதி ஒளிமுறிவு ஏற்படுங்கால் இடையுள்ள பொருள்கள் தெரியா எனும் ஒளியியல் தத்துவம் தெளிவுற உரைக்கப்பட்டிருத்தல் காண்க. மணிஒளிகால, எதிர் பொருள் தெரியாவாறு, சுடர் விம்முற்று எழுதலின், அது இது என ஓராது, அலமரல் உறுவார் எனக் கூட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rayed gems poured out their light, so that nothing the eye reached could be seen,
  2. and blaze swelled up against blaze on every side, the young men
  3. and the women whose hair spreads honey could not tell
  4. which walled mansion was which, and wandered in bewilderment.

What the poem says

The city is so ablaze with jewels that people are dazzled. The light of one person's ornaments clashes with the light of the person coming the other way, until nothing can be made out at all.

Young men and women, eyes stinging from the glare, cannot even tell which tall walled house is their own, and go round in confusion. The commentary admires the poet's observation that where light meets light, the things in between become invisible.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1katir maṇi oḷi kālak kavar poruḷ teriyāvāṟu
etir etir cuṭar vimmuṟṟu eḻutaliṉ, iḷaiyōrum
matu viri kuḻalārum, matiluṭai neṭumāṭam
atu itu eṉa ōrātu, alamaral uṟuvārum.