கம்பராமாயணம் 1268 · பால 21.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேர்மிசை வருவாரும் - தேர்களின் மேல் வருபவர்களும்; சிவிகையில் வருவாரும் - பல்லக்குகளில் வருபவர்களும்; ஊர்தியில் வருவாரும் - பிறவாகனங்களிலும் வருபவர்களும், ஒளிமணிநிரை ஓடைக் கார்மிசை வருவாரும் - ஒளிநிறையும் மணிகள் பதித்த முகபடாம் அணிந்த மேகம்போற் கரிய (ஆண்) யானைகளின்மேல் வருவாரும்; கரிணியில் வருவாரும் - பெண்யானைகளின்மேல் வருவாரும்; பார் மிசை வருவாரும் - பூமியின்மேல் நடந்து வருபவர்களும்; பண்டியில் வருவாரும் - வண்டிகளில் வருபவர்களும் (ஆயினர்).
கார் - மேகம். நிற ஆகுபெயராய் யானையைக் குறித்தது. கரி என்பதன் பெண்பாலாய், கரிணி என்பது பெண் யானையைக் குறித்து நின்றது. வருவார் இத்தனை வகையினர் ஆயினர் என்க. கார் - மேகம் எனக்கொண்டு உவமையாகு பெயராய் யானையைக் குறித்தது எனினுமாம். அப்போது, கார்மேகம் யானைகளையும் அவையணிந்த முகபடாமின் ஒளிகள் மின்னலினையும் குறித்தன என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some came on chariots, some came in palanquins,
- some came on other mounts, some came on dark clouds
- in face-plates set with rows of shining gems, some came on she-elephants,
- some came on foot over the ground, some came in carts.
What the poem says
Guests stream into the city by every means of travel: chariots, palanquins, other mounts, bull elephants, cow elephants, carts, and on foot.
The bull elephants are called simply 'dark clouds'. The commentary explains that the word for cloud stands for the elephant because of its colour, and that the jewelled plates on the elephants' foreheads flash like lightning in those clouds.