கம்பராமாயணம் 1269 · பால 21.36

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முத்து அணி அணிவாரும் - முத்துக்களாலான நகைகளைப் (புதிதாக) அணிபவர்களும்; மணி அணி முனிவாரும் - முன்பே அணிந்திருந்த மணியாபரணங்களை வெறுத்து நீக்குபவர்களும்; பத்தியின் நிமிர் செம்பொன் பலகலன் மகிழ்வாரும் - வரிசை வரிசையாக, உயர்ந்த செம்பொன்னால் ஆகிய பல்வகை நகைகளை அணிந்து மகிழ்பவர்களும்; தொத்துஉறு தொழில் மாலை சுரிகுழல் அணிவாரும் - பூங்கொத்துகளை வைத்து கைத்திறன் காட்டிப் புனையப்பட்ட மாலைகளை, நெளிந்த கூந்தலில் அணிபவர்களும்; சித்திர நிரை தோயும் செந்துகில் புனைவாரும் - ஓவிய வரிசைகள் அமையப்பெற்ற செந்நிறப் பட்டாடையை உடுப்பவர்களும் (ஆயினர்).

புதியன புனைதற்கு மகளிர்க்கு உள்ள விருப்பம் சுட்ட, “முத்து அணி அணிவாரும் மணியணி முனிவாரும்” என்றார். பெண்மை அழகுருவம் ஆதலின், அழகு மேலும் மேலும் ஆரா அழகுபெறத் தவிக்கும் தவிப்பை இப்பாடல் சுட்டுவது காண்க. இத்தனை வகையில் அணிந்து வந்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some put on pearl ornaments, some took off their gem ornaments in disgust,
  2. some delighted in many pieces of red gold rising in rows,
  3. some put skilfully made garlands of clustered flowers in their curling hair,
  4. some dressed in red silks patterned with rows of pictures.

What the poem says

More of the women's dressing. Some decide they want pearls after all and take off the jewelled ornaments they had already put on. Some delight in tiers of red-gold ornaments; some put intricately made garlands of flower clusters in their wavy hair; some put on red silk woven with rows of pictures.

The commentary sees in this the love of something new, and the restless wish of beauty to become still more beautiful.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muttu aṇi aṇivārum, maṇi aṇi muṉivārum,
pattiyiṉ nimir cem poṟ pala kalaṉ makiḻvārum,
tottu uṟu toḻil mālai curi kuḻal aṇivārum,
cittira nirai tōyum cen tukil puṉaivārum.