கம்பராமாயணம் 1271 · பால 21.38

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண் உறல் அரிது, என்றும் கருதுதல் அரிது, அம்மா!
எண் உறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண் உறு திரு நாள் ஒத்தது அம் மண நாளே.

பொருள் · Meaning in Tamil

உள்நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் கண்ணுறல் அரிது - மிதிலை நகரத்துள் நிறைந்துள்ள செல்வம் முழுவதனையும் ஒரே இடத்தில் செல்லக் காணுதல் என்பது என்றும் அரிய செயலாகும்; என்றும் கருதுதல் அரிது அம்மா! - அவ்வாறு செல்வதை மனத்தால் நினைத்துப் பார்ப்பது கூட என்றும் அரியதொரு வியப்பாகும்! (அன்று அது நிகழ்ந்தது!); எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் - மதித்தற்குரிய ஒளியுலகாகிய வான நாடாளும் தேவேந்திரன்; முடி சூடும் மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாள் - தூயதாக்கித் தன் திருமுடியைச் சூடிக் கொள்ள (விழா) எடுத்த நாளைப் போன்றதே ஆயிற்று, மிதிலையில் நிகழ்வுறும் அந்த மணநாள்.

மிதிலை நகரத்துச் செல்வம் அனைத்தும் மணநாள் அன்று வீதியில் காணப்பட்டது என்பது முதல் இரண்டடிகளின் கருத்து. நினைக்கும் பொருள் எல்லாம் நிறைந்து கிடக்கும் அந்நெடு வீதிகள் மிக்க அந்த நீள் நகர் மிதிலை. நினைக்கும் பொருள் எல்லாம் நிறைந்து கிடக்கும் வானநாட்டு வேந்தன் முடிசூடும் அன்றுள்ள வான் நகரே கவிஞர் நினைவுக்கு வந்தது என்க. மண்ணுறு திருநாள் - மகுடாபிடேகத் திருநாள். இதனை, “மண்ணுமங்கலம்” (புறப். வெண். பாடாண். 30) என்பர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To see all the swelling wealth within the city flow to one place
  2. is rare at any time, and rare even to imagine. Ah!
  3. That wedding day was like the holy day of anointing on earth
  4. when Indra of the honoured, shining heaven is crowned.

What the poem says

The description of the city ends with a summary. All the wealth stored up inside Mitilai has poured out into its streets at once, something rarely seen and hard even to imagine.

The poet can think of only one comparison: the day when Indra, king of the gods, is ritually bathed and crowned in his heavenly city, where everything one could wish for is found. With this the scene moves to the wedding hall, and the metre changes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uḷniṟai nimir celvam oru tuṟai cela eṉṟum
kaṇṇuṟal aritu, eṉṟum karutal aritu, ammā!
eṇṇuṟu cuṭar vāṉattu intiraṉ muṭi cūṭum
maṇṇuṟu tirunāḷ ottatu am maṇa nāḷē.