கம்பராமாயணம் 1272 · பால 21.39

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரை வளை மண வினை நிரப்பும் மண்டபம்,
அரசர் தம் அரசனும் அணுகல் மேயினான்.

பொருள் · Meaning in Tamil

கரை தெரிவு அரியது - (அகல நீளங்களின்) எல்லை தெரியக் கடினமானதும்; கனகம் வேய்ந்தது - பொன் வேயப்பட்டதும்; வரை என உயர்ந்தது - மலை போன்று உயர்ச்சியுடையதும், மணியின் செய்தது - மாணிக்கங்கள் பதிக்கப்பட்டதும், நிரை வளை மண வினை நிரப்பு மண்டபம் - வரிசையாக வளையல்கள் அணிந்தவளான சீதையின் திருமண நிகழ்வுகளுக்குரிய மங்கலப் பொருள்களை நிரப்பி வைத்துள்ளதுமான அந்த மண மண்டபத்தை; அரசர் தம் அரசனும் அணுகல் மேயினான் - அரசர்க்கரசனாகிய தசரத வேந்தனும் வந்தடைந்தான்.

நிரைவளை - அன்மொழித் தொகை. சீதையைக் குறித்தது - உயர்வு நவிற்சியணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Its limits hard to make out, roofed with gold,
  2. rising high like a mountain, built of gems:
  3. the hall filled for the wedding of her with rows of bangles,
  4. and the king of kings set out to approach it.

What the poem says

Tacarataṉ, king of kings, sets out for the wedding pavilion. It is so vast that no one can see where it ends, roofed with gold, tall as a mountain and studded with gems, and filled with everything needed for the marriage rites of Cītai.

She is referred to only as 'she of the rows of bangles', a phrase standing for the woman who wears them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karai terivu ariyatu, kaṉakam vēyntatu,
varai eṉa uyarntatu, maṇiyiṉ ceytatu,
niraivaḷai maṇaviṉai nirappu maṇṭapam,
araicartam aracaṉum aṇukal mēyiṉāṉ.