கம்பராமாயணம் 1273 · பால 21.40

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெண் குடை இள நிலா விரிப்ப, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிடப்,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, ஏகினான்.

பொருள் · Meaning in Tamil

வெண்குடை இளநிலா விரிக்க - வெண் கொற்றக் குடை இளநிலவின் ஒளிவீச; மின் எனக் கண்குடை இனமணி வெயிலும் கான்றிட - மின்னல் போன்று, காண்பாருடைய கண்களைக் கூசுமாறு (நிலவொளியேயன்றி) வெயிலின் ஒளியையும் அக்குடை வீச; குடை வண்டினம் பண்பாட - மலர்களைக் குடைகின்ற வண்டினங்கள் பண் இசை பாட; ஆடல் மா மண்குடை தூளி விண் மறைப்ப எய்தினான் - வெற்றிக் குதிரைகள் மண்ணைக் கால்களால் மிதித்தலால் உண்டான புழுதி வானத்தை மறைக்கத் (தசரதன்) வந்தடைந்தான்.

மங்கல நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் வருவதற்கு எனப் பயிற்றுவிக்கப்பட்ட ஆடற்குதிரைகள், நிலம் புழுதிபட ஆடி வந்தன என்பார் “ஆடல்மா மண் குடை தூளி விண் மறைப்ப எய்தினான்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His white parasol spreading young moonlight, and clusters of gems
  2. pouring out sunlight too, dazzling the eyes like lightning,
  3. with swarms of bees, that burrow into flowers, singing their tunes, and the dust
  4. that dancing horses churned from the earth hiding the sky, he went.

What the poem says

Tacarataṉ's procession to the hall. His white royal parasol glows like the young moon, while the jewels set in it flash like sunlight and lightning, dazzling the eyes of onlookers. Bees hum as if singing. The horses, trained to dance in festive parades, prance so vigorously that the dust they kick up hides the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṇkuṭai iḷa nilā virikka, miṉ eṉak
kaṇ kuṭai iṉa maṇi veyilum kāṉṟiṭa,
paṇ kuṭai vaṇṭiṉam pāṭa, āṭal mā
maṇ kuṭai tūḷi viṇ maṟaippa, ēkiṉāṉ.