கம்பராமாயணம் 1274 · பால 21.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன - (அப்பொழுது) மங்களகரமான மண முரசுகளின் கூட்டம் மழை மேகங்களின் ஒலியைப் போல் முழங்கின; சங்குகள் முரன்றன - (மங்கலச்) சங்கின் கூட்டங்களும் ஒலித்தன; தாரை, பேரிகை பொங்கின - தாரையென்னும் ஊது குழலும், பேரிகையென்னும் தோற் கருவியும் மிக்கொலித்தன; மறையவர் புகலும் நான்மறை - வேதம் வல்லார் ஒலிக்கின்ற நான்கு வேதங்களின் ஒலி; கங்குலின் ஒலிக்கும் மாகடலும் போன்றதே - இரவுப் பொழுதில் மிக்கு ஒலிக்கும் பெருங் கடலின் ஓசையை ஒத்தது ஆயிற்று.
ஒலிகளை அடுக்கிக் கூறி, மணக்காட்சியைக் கற்பார் மனக்கண் முன் கொண்டுவருகிறார் கவிஞர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The auspicious drums thundered like rain clouds,
- the conches droned, the long horns and the great drums
- swelled, and the four Vedas recited by the Brahmins
- were like the great sea roaring in the night.
What the poem says
The procession is full of sound: wedding drums thunder like monsoon clouds, conches blow, long trumpets and big kettledrums swell, and the Brahmins' chanting of the four Vedas rises like the roar of the ocean at night. By heaping one sound on another, the poet sets the wedding scene before the reader.