கம்பராமாயணம் 128 · பால 3.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொழிவன சோலைகள் புதிய தேன் சில - சில சோலைகள் புத்தம் புதிய தேனைச் சொரிவன; விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென நுழைவன - அத்தேனை விரும்பி தென்றலும் வண்டும் மெல்ல அச் சோலைகளில் நுழைவனவாம்; அன்னவை நுழைய - அவை அவ்வாறு நுழைய; பிரிந்தவர் கொதிக்கும் கொங்கை - தலைவனைப் பிரிந்த மகளிரின் (காமத்தால்) கொதிக்கும் தனங்கள்; நோவொடு குழைவன - வருத்தத்துடன் மெலிவனவாயின.
சோலைகள் அன்றலர்ந்த மலரின் மதுவைப் பொழிகின்றன. அந்தத் தேனை விரும்பித் தென்றலும் வண்டும் மெல்ல அச்சோலையினுள் நுழைகின்றன. தென்றலும் வண்டும் பிரிந்தவருக்குத் துன்பம் விளைவிப்பன என்பதால் தலைவனைப் பிரிந்த தலைவி, காம நோயால் வருந்த, தனங்கள் வருந்தி மெலிந்தனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some groves pour out fresh honey;
- the southern breeze and the bees, desiring it, slip gently in;
- and as they enter, with pain
- the burning breasts of women parted from their lovers grow faint.
What the poem says
The groves drip honey from newly opened flowers, and the soft south wind and the bees come in to enjoy it.
In Tamil love poetry both the breeze and the humming of bees are torments to separated lovers, because they stir up memories and longing. So the women whose husbands are away grow weak with sorrow.