கம்பராமாயணம் 1299 · பால 21.66

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காசொடு கண் நிழல் கஞலக் கைவினை
ஏசு அறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின் மகரவாய் விளங்கு வாள் முகம்
ஆசையை ஒளிகளால் அளந்து காட்ட ஏ.

பொருள் · Meaning in Tamil

காசொடு கண் நிழல் கஞல - மணிகளின் ஒளியோடு காண்பார் கண் ஒளியும் இணைந்து விளங்க; கைவினை ஏசறு கிம்புரி - கைகளால் செய்யப்படுகிற விசித்திர வேலைப்பாடுகளில் குற்றமில்லாத கிம்புரி என்னும் அணியானது (சுறா மீனின் திறந்த வாய் வடிவமாகச் செய்யப் படுவதாதலின்) அச்சுறா மீனின்; எயிறு வெண்நிலா வீசலின் - பற்களாகப் பதித்துள்ள மணிகளிலிருந்து வெண்ணிறமான ஒளி வீசுவதால்; மகரவாய் விளங்கும் வாள் முகம் - அந்தக் கிம்புரி என்னும் அணியினது ஒளி விளங்கும் முகம்; ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே - திக்குகளின் எல்லையை இவ்வளவு என்று அளந்து காட்ட (இராமன் அணிந்தான்.) கஞலல்: விளங்கல். ஆசை: திசை. கிம்புரி: மகர மீனின் திறந்த வாய் போன்றதாய்த் தொடையில் அணியப்படும் ஓர் அணி. இதனைக் “குறங்குசெறி” என்பர். “மகரவாய்” என்று கூறுதலும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the gleam of its gems and the light of the eyes that saw it crowding together,
  2. the flawless kimpuri of fine handiwork, its teeth
  3. throwing out white moonlight, so that the bright face of the makara mouth
  4. measured out the directions with its rays.

What the poem says

Irāmaṉ puts on the kimpuri, a thigh ornament shaped like the open jaws of a makara, a sea monster like a shark. Gems set as its teeth throw out a white, moon-like light.

The ornament glitters so brightly that its radiance seems to reach the ends of every direction, as if measuring how far the world extends. The commentary notes that the ornament is also called kuṟaṅkuceṟi, 'thigh band', or simply 'makara mouth'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kācoṭu kaṇ niḻal kañalak kaiviṉai
ēcaṟu kimpuri eyiṟu veṇ nilā
vīcaliṉ makaravāy viḷaṅkum vāḷ mukam
ācaiyai oḷikaḷāl aḷantu kāṭṭavē.