கம்பராமாயணம் 1300 · பால 21.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?” என - இனிமேல் பரந்த வடிவு கொண்டு (திரிவிக்கிரம அவதாரத்தில்) உலகினை அளந்தது போல், இத்திருவடிகள் எப்படி அளந்து விடும் பார்ப்போம் என்று கூறித்; தனித்தனி தடுப்பன போலும் சால்பின - தனித்தனியே தடை செய்வன போன்ற இயல்பினையுடையனவாய், நுனிப்பு அரும் நுண்வினைச் சிலம்பும் நோன் கழல் - நுனித்து நோக்கினும் முழு நுட்பமும் கண்டறிய இயலாதவாறு செய் தொழிலையுடைய ஒலிக்கின்ற வலிய வீரக் கழலையும்; பனிப்பரும் தாமரைப் பாதம் பற்றவே - குளிர்ந்த பெரிய செந்தாமரை மலர் போலும் திருவடிகளைச் (சுற்றிலும்) பற்றிக் கொள்ள (இராமன் அணிந்தான்).
“பனிப்பரும் தாமரைப் பாதம்” என்பதற்கு, பனிப்பு அரும் தாமரைப் பாதம் எனப் பிரிந்து, பற்றினார் அஞ்சி நடுங்க வேண்டாத தாமரைப் பாதங்கள் எனினும் பொருந்தும். காவிய நாயகர்கள் தெய்வமாயின் கேசாதிபாதமாக வருணித்தல் வேண்டும் எனும் மரபையொட்டி /2/0ஆம் பாட்டில் முடியணி வருணனையில் தொடங்கி, இப்பாடலில் அடியணியாகிய சிலம்பும் கழலும் அணியும் வருணனையோடு முடித்திருக்கும் திறம் நோக்குக. சிலம்பும் - நோன் கழல். சிலம்பு - சிலம்புதல், ஒலித்தல். வில்லோன் காலன கழல், மெல்லடி மேலவும் சிலம்பு (குறுந் தொகை.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if each one were saying, 'Where will you go now, spreading out to measure the world?'
- and holding him back, each on its own foot,
- the strong, ringing anklets of a fine craft too subtle to trace
- clasped his cool, great lotus feet.
What the poem says
Irāmaṉ fastens the warrior's anklets on his lotus feet. They are so finely made that no one could trace all the detail of their work, and they jingle as he moves.
The poet imagines them as gripping each foot to stop it: 'Where do you think you are going this time, stretching out to measure the world?' This recalls Viṣṇu's dwarf avatar, who grew to cosmic size and measured the universe in three strides. Following the convention for describing a god from head to foot, the description of Irāmaṉ's dress began with his crown and ends here with his feet.