கம்பராமாயணம் 130 · பால 3.49

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குதை வரிச்சிலை நுதல் - நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற நெற்றியையும்; கொவ்வை வாய்ச்சியர் - கோவைப் பழம் போன்ற வாயையும் உடைய பெண்களின்; பதயுகத் தொழில்கொடு - இரண்டு பாதங்களுக்கும் (செம்பஞ்சு ஊட்டுதலாகிய) தொழிலைக் கொண்டு; பழிப்புஇலாதன - பிறரால் பழித்துக் கூற இயலாதனவாகிய; ததை மலர்த்தாமரை அன்னதாளினால் - நெருங்கிய இதழ்களை உடைய தாமரை போன்ற பாதங்களால்; உதைபட - (ஊடல்கொண்டு) உதை பட்டதனாலே; உரவுத் தோள்கள் சிவப்பன - ஆண்களின் வலிமைமிக்க தோள்கள் சிவந்து காணப்படும்.

ஊடலால் தலைவி, தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால் அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.

குதை: வில்நாண். வரி: கட்டு. குதை, வரி சிலை என்று வில்லைச் சிறப்பிக்கிறார். சிலை நுதல்: சிலை போன்ற நுதல் உவமைத்தொகை. பத யுகம்: இரண்டு பாதங்கள். இது முதல் மூன்று பாடல்கள் அந்நகரத்தில் வாழும் மகளிரின் மேனி அழகைக் கூறுவனவாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Struck by feet that are like full-petalled lotuses,
  2. flawless, tinted by the care given to both of them,
  3. of women with brows like strung, banded bows and lips like the kovvai fruit,
  4. the strong shoulders of the men turn red.

What the poem says

This verse begins a short group on the beauty of Ayōttī's women. In a lovers' quarrel, a woman may playfully kick her husband.

Her feet are dyed red with lac, so when she kicks his strong shoulders, they turn red. Her brows are like a strung bow, and her lips are as red as the kovvai fruit.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kutai varic cilainutal kovvai vāycciyar
patayukat toḻilkoṭu paḻippu ilātaṉa
tatai malart tāmarai aṉṉa tāḷiṉāl
utaipaṭac civappaṉa, uravut tōḷkaḷē.