கம்பராமாயணம் 131 · பால 3.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொழுது உணர்வு அரிய - பொழுதை அறிவதற்கு அரிய; அப் பொருவுஇல் மாநகர் - அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள; தொழு தகை மடந்தையர் - (கற்பின் சிறப்பால்) எல்லோரும் வணங்கத்தக்க பெருமையுள்ள பெண்களது; சுடர்விளக்கு என பழுதுஅறு மேனியை - ஒளி விளக்கு போன்ற, குற்றம் எதுவுமின்றித் திகழும் உடம்பினை; பார்க்கும் ஆசை கொல் - பார்க்க விரும்பும் ஆசையால்தானோ, எழுது சித்திரங்களும் இமைப்பு இலாத - எழுதிய ஓவியங்களும் கண்களை இமைக்காதனவாய் உள்ளன.
பொழுது உணர்வரிய: அந்நகரத்துப் பெண்களின் அணிகலன்களின் ஒளியால் இரவா? பகலா? என்று உணர இயலாத மிக்க ஒளியுடைய நகராதலால் இவ்வாறு கூறினார். “நல்லார் அணிகலம் பகலைச் செய்ய” சிந்தாமணி (2500) ஒப்பு நோக்கத்தக்கது. அடுத்த பாடலில் (143) மகளிர் மேனிக்கு விளக்கை உவமையாக்குதல் காண்க. ஓவிய உருவங்கள் கண்களை இமைக்காமல் இருப்பதற்கு, அயோத்தி மகளிரின் பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைபோலும் எனக் காரணம் கூறியதால் இது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In that peerless great city, where one cannot tell the time of day,
- the women, worthy of worship, have flawless bodies
- like glowing lamps — is it out of longing to look at them
- that even the painted pictures never blink?
What the poem says
The city is so bright with the jewels of its women that one can't tell night from day. The women are so virtuous that they are worthy of reverence.
The poet playfully explains why the figures in paintings never blink: they cannot take their eyes off the radiant bodies of Ayōttī's women.