கம்பராமாயணம் 132 · பால 3.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தணிமலர்த் திருமகள் - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி; தங்கும் மாளிகை - தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று - மிக்க ஒளி வீசி நின்று; இருள் துரப்பன - இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ - செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல - மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே - அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.
நெய் விளக்கின் ஒளியும், மணிகளின் ஒளியும் ஆகிய இரண்டிலும் மேலோங்கி இருப்பது மகளிரின் மேனி ஒளியே. அதுவே அந்நகரத்தின் இருளை நீக்குவது எனக் கூறுகிறார். இருள் ஓட்டும் இயல்பு கொண்ட விளக்கொளி, மணியொளி இரண்டையும் நீக்கி அவ்வியல்பை மகளிர் மேனிக்கு ஏற்றிக் கூறியதால் இது அவநுதியணியாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the mansions where Tirumakaḷ of the cool lotus dwells,
- what spreads its clustered light and drives away the darkness —
- is it the glow of lamps with dense flames fed on ghee?
- Or lamps of gems? It is neither: it is the bodies of the women.
What the poem says
Lakṣmī, the goddess of fortune who sits on a lotus, dwells in Ayōttī's mansions. The light that drives out the darkness there comes neither from ghee lamps nor from glowing gems.
It is the radiance of the women themselves. The figure denies the obvious source in order to assert a more striking one.