கம்பராமாயணம் 1318 · பால 21.85
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தண்டிலம் விரித்தனன் - (வசிட்ட மாமுனிவன்) (அக்கினி வளர்க்கும் இடத்தே பரப்ப வேண்டிய) மணலைப் பரப்பினான்; தருப்பை சாத்தினன் - தருப்பைகளை உரிய இடங்களில் வைத்தான்; மண்டலம் விதிமுறை வகுத்து - (அக்கினி வைத்தற்குரிய) வட்டமான இடத்தை வேத விதிப்படி ஏற்படுத்தி; மென்மலர் கொண்டு நெய் சொரிந்து எரிகுழும மூட்டினான் - மெல்லிய மலர்களைக் கொண்டு நெய்யை ஆகுதியாகச் சொரிந்து ஓம அக்கினி குவிந்தெழுமாறு செய்தான்; பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன் - தொன்று தொட்டு வந்த வேத நெறிப்படி (மந்திரங்களால்) தொழுது, (மணச் சடங்கினைச்) செய்தான்.
தண்டிலம்: மணல்; வடசொல். “அக்கினியைப் பிரதிட்டிக்குமிடத்தே சதுரமாகப் பரப்புகின்ற மணல்” (சீவக.) என்பர் நச்சினார்க்கினியர். “தருமணல், தருப்பை ஆர்ந்த சமிதை இம்மூன்றினானும் விரிமலர் அணிந்த கோல வேதிகை” (சீவக. 2403) என்பார் தேவரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He spread the sand for the altar, he laid out the darbha grass,
- he marked out the fire circle according to the rules, and with soft flowers
- pouring ghee, he kindled the fire to blaze up high;
- he performed it all by the ancient Vedic way, with praise.
What the poem says
Vacittaṉ prepares the sacred fire. He spreads a bed of sand on the place where the fire is to be set, lays the darbha grass in its proper places, marks out the fire circle as the rules require, and pours ghee with soft flowers so that the fire leaps up. Throughout he chants the hymns in the ancient Vedic manner.
The commentary explains taṇṭilam as the square bed of sand on which the sacred fire is installed.