கம்பராமாயணம் 1356 · பால 22.19

Section பால காண்டம் / 22. பரசுராமப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவன் - அந்தப் பரசுராமன்; அன்னது - அவ்வாறு; பகரும் அளவையின் - கூறியபொழுதில்; மன்னவன் - தயரதச் சக்கரவர்த்தி; அயர்வான் - மனந் தளர்வானாய்; புவனம் முழுவதும் வென்று - “உலகாளும் மன்னர்கள் அனைவரையும் வென்று; ஒரு முனிவற்கு அருள்புரிவாய் - ஒப்பற்ற முனிவனாகிய காசியபனுக்குத் தானமாக அருளியவனே!; சிவனும் அயன், அரியும் அலர் - சிவன், பிரமன், திருமால் ஆகிய மூவரும் (உனக்கு ஒரு பொருள் அல்லர்); சிறு மானிடர் பொருளோ? - இச்சிறிய மானிடர்கள் உனக்கு ஒரு பொருள் ஆவரோ? (ஆகார்); “இனி இவனும் எனது உயிரும் உனது அபயம்” என்றான் - “இப்போது, (என் மகனாகிய) இந்த இராமனும், என்னுடைய உயிரும் உனது அடைக்கலப் பொருள்கள் (காத்தருள்)” என்றான்.

வீரத்தால் வென்ற உலகம் முழுவதையும் தானமாகக் கொடுத்திட்ட நீ, இப்போது எங்கள் உயிர்கள் இரண்டையும் தானமாகத் தந்தருளவேண்டும் என தசரதன் வேண்டினான். அயர்வான் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he said this, the king, faint with dread, spoke:
  2. 'You who conquered the whole world and gave it in grace to a sage,
  3. to you even Civaṉ, Ayaṉ and Ari are nothing; are little men worth your while?
  4. From now on this boy and my own life are under your protection.'

What the poem says

Tacarataṉ, desperate, appeals to Paracurāmaṉ's generosity. He once won the entire earth and gave it away to the sage Kāśyapa; even the three great gods, Civaṉ, Ayaṉ (Brahmā) and Ari (Viṣṇu), are no match for him, so mere mortals are beneath his notice.

The king asks him for one more gift: to spare both Irāmaṉ's life and his own, which hangs on his son's.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avaṉ aṉṉatu pakarum aḷavaiyiṉ, maṉṉavaṉ ayarvāṉ,
'puvaṉam muḻuvatum veṉṟu oru muṉivaṟku aruḷpurivāy
civaṉum ayaṉ ariyum alar, ciṟu māṉiṭar poruḷō?
ivaṉum, eṉatu uyirum uṉatu apayam iṉi' eṉṟāṉ.