கம்பராமாயணம் 136 · பால 3.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தழல்விழி ஆளியும் துணையும் - நெருப்பென விழிக்கும் கண்களை உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும், தாழ்வரை முழை விழை - தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக் குகைகளை விரும்பும், கிரி நிகர் களிற்றின் மும்மத மழைவிழும் - மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும்; விழும் தொறும் மண்ணும் கீழ்உற குழை விழும் - அவ்வாறு மழை சொரியும் தோறும் நிலமும் ஆழமாகுமாறு சேறாகும்; அதில் கொடித்திண் தேர்கள் விழும் - அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதையுண்ணும்.
நெருப்பெழும் விழிகொண்ட ஆண் சிங்கமும் அதன் பெண்சிங்கமும் தங்குவதற்கு ஏற்ற குகைகள் கொண்டது அம் மலை; அந்த மலைபோன்ற யானைகளின் மும்மதமும் மழை போலப் பொழிவதால் மண்ணொடு கலங்கித் தரை சேறாகும்; அந்தச் சேற்றிலே தேர்கள் புதையுண்ணும். இப்பாடலின் செய்தி இது. ‘தழல் விழி ஆளியும் துணையும் தாழ்வரை முழை விழை’ என்ற நீண்ட தொடர் கிரிக்கு அடை. தாழ்தல்: தங்குதல். மும்மதம்: கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Elephants like hills whose caves are loved by fire-eyed lions
- and their mates for their lairs pour down
- the rain of their threefold rut; and every time it falls the very earth
- turns to deep mire, and into it sink the strong bannered chariots.
What the poem says
The war elephants of Ayōttī are as huge as mountains, the kind of mountains whose caves shelter lions and their mates.
The ichor they pour out in musth comes from three places, the ears, temples and genitals. It falls so heavily that it turns the streets into deep mud, and the heavy chariots sink into it.